Published : 27 Aug 2018 09:52 AM
Last Updated : 27 Aug 2018 09:52 AM

திமுக தலைவர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்; பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல்: நாளை நடக்கும் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர் களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் இருவரும் நாளை நடக்கும் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். இதையடுத்து திமுக பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 28-ம் தேதி (நாளை) நடக்கும் என்றும் அதில் கட்சித் தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர் பதவிக்கு தற்போது செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினும் பொரு ளாளர் பதவிக்கு தற்போது முதன்மைச் செயலாளராக உள்ள துரைமுருகனும் போட்டி யிடுகின்றனர். இதன்படி, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு முன்பாக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் தோட்டத்தில் உள்ள பொதுச் செய லாளர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்று அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

அதையடுத்து மெரினா கடற் கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் வேட்புமனுவை வைத்து ஆசியும் பெற்றனர். பின்னர் கோபாலபுரம் சென்ற மு.க.ஸ்டாலின் தனது தாய் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். அவ ருடன் துரைமுருகனும் ஆசிபெற் றார். அங்கிருந்து இருவரும் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றனர். அங்கு திரளாக கூடியிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். காலை 10 மணி அளவில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தலைவர் பதவிக்கு போட்டியிட மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை கட்சியின் 65 மாவட்ட செயலாளர்களும் முன்மொழிந்த னர். மேலும், கட்சித் தலைவர் பதவிக்கு ஸ்டாலினுக்காக அனைத்து மாவட்டச் செயலாளர் களும் தனித்தனியாகவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதையடுத்து திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அங்கு திரண்டிருந்த தொண்டர் கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பி னர். திமுக மகளிரணிச் செய லாளரும் எம்பியுமான கனிமொழி, மு.க.ஸ்டாலினுக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், வேறு யாரும் வேட்புமனுதாக்கல் செய்யாததால், தலைவராக மு.க.ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியா னது.

50 ஆண்டுகள் தலைவர் பதவியில் நீடித்த கருணாநிதிக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். அண்ணா அறிவாலயத்தில் நாளை நடக்கும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவராக மு.க.ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x