எம்ஜிஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால், அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார்: கமல்ஹாசன்

எம்ஜிஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால், அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார்: கமல்ஹாசன்
Updated on
1 min read

எம்ஜிஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால், கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 95.

மறைந்த கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. தமிழக அரசின் மறுப்புக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ''அண்ணா இருந்தபோது கழகம் காத்திட வளர்ந்த இரு தம்பிகள் கலைஞரும் எம்ஜிஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்ஜிஆருக்குப் பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்ஜிஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால், கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார்'' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in