‘கிங்’ தலைவர் Vs ‘சேகர’மான மாண்புமிகு | உள்குத்து உளவாளி

‘கிங்’ தலைவர் Vs ‘சேகர’மான மாண்புமிகு | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

ஆலயக் கட்சியில் சென்னை மண்டலத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் ‘கிங்’ தலைவருக்கும் ‘சேகர’மான மாண்புமிகுவுக்கும் இடையில் வெடித்த மோதல் உரசிக்கிட்டே போகுதாம். முதன்மையானவரே தலையிட்டு சாந்தப் படுத்தியும் இருவரும் அதிகார அங்குசத்தை இன்னும் கீழே வைக்க வில்லையாம்.

சமீபத்தில், தேர்தல் பணிகள் தொடர்பாக தலைநகர் மண்டலக் கூட்டத்தைக் கூட்டினாராம் ‘கிங்’ தலைவர். அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தை, மாவட்டப் பொறுப்பிலும் இருக்கும் ‘சேகர’மானவர் மட்டும், இவரெல்லாம் கூட்டம் போட்டு நான் போறதா என்ற கெத்துடன் புறக்கணித்து விட்டாராம். அப்படியும் விடாமல், ‘கிங்’ தரப்பிலிருந்து போனைப் போட்டு விசாரித் தார்களாம்.

அதற்கு, “நீங்க ஆரம்பிங்க. தோ.. வந்துடுறேன்” என்று பதறியது போல் பாவ்லா காட்டியவர், கடைசி வரைக்கும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லையாம். ‘துர்க்கை’ அம்மனோட அருளாசி இருக்கிறதால தான் தலைவரே சொன்ன பின்னாடியும் ‘சேகர’மானவர் இத்தனை அலட்சியமா இருக்காரு என்கிறார்கள் உள் விவகாரங்களை அறிந்த ஆலயக் கட்சி அன்பர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in