

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து புதிய சங்கம் தொடங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற் றும் டாக்டர்களுக்காக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 15 ஆயிரம் அரசு டாக்டர் களை உறுப்பினராக கொண்ட இந்த சங்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பிரச்சினை ஏற்பட்டது. இதனால், சங்கத்தில் இருந்து வெளியேறிய ஒரு பிரிவு அரசு டாக்டர்கள், ‘அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் (SDPGA) சங்கம்’ என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்கினர். இந்த புதிய சங்கம் அரசு டாக்டர் களின் கோரிக்கைகளுக்கான பல் வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலை வர் கே.செந்திலுக்கும் முன்னாள் செயலாளர் பி.பாலகிருஷ்ணனுக் கும் இடையே மோதல் உரு வானது. இந்த மோதல் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலிலும் எதிரொலித்தது. கவுன்சில் தலை வர் தேர்தலில் செந்தில் வெற்றி பெற்றார். அதன்பிறகு டாக்டர்கள் சங்கத்தில் இருந்து பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சங்கத்தில் இருந்து விலகிய பாலகிருஷ்ணன் ஆதரவாளர்கள், அவரது தலைமையில் ‘ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங் கம்’ என்ற பெயரில் புதிய சங்கத்தை சென்னையில் நேற்று தொடங்கினர். மத்திய அரசு டாக்டர் களுக்கு இணையாக தமிழக அரசு டாக்டர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என போராடி வரும் நேரத்தில் சங்கத்தில் பிளவு ஏற்பட் டிருப்பது வருத்தம் அளிப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் முதல் கூட்டம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான அரசுடாக்டர்கள் இதில் பங்கேற்றனர்.
சங்கத்தின் தலைவராக பி.பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாள ராக அருள்பிரகாஷ், செயலாளராக டி.செந்தில், பொருளாளராக கேசவன், துணை தலைவர்களாக நெடுஞ்செழியன், சுப்பிரமணி யம், துணைச் செயலாளராக முத்துக்குமார், கீர்த்திவாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய மருத்துவக் கவுன் சிலின் தமிழக தலைவர் டாக்டர் ஜெ.ஏ.ஜெயலால், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் பிரகாசம், ஆனந்த் கிருஷ்ணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.