SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின்

SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: “SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக இன்று (நவம்பர் 11) திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.” என இன்றைய போராட்டத்தை சுட்டிக்காட்டி பதிவொன்றை முதல்வர் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: “SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.

ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு எதிராக சட்டப் போராட்டம். மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட #SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட #WarRoom #Helpline.

களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும், ண்டன முழக்கங்களை எழுப்பியும் #SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர். தொடர்ந்து செயலாற்றுவோம். நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in