செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகள் முடிவுக்கு வரும் வரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விசாரிக்க தடை கோரி மனு

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகள் முடிவுக்கு வரும் வரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விசாரிக்க தடை கோரி மனு

Published on

சென்னை: முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில் பாலாஜி முந்​தைய அதி​முக ஆட்​சி​யில் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​ச​ராக பதவி வகித்​தார். அப்​போது அரசு போக்​கு​வரத்​துக்​கழகத்​தில் வேலை வாங்​கித்​தரு​வ​தாகக் கூறி பலரிட​மும் பணம் பெற்று மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோர் மீது சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 3 மோசடி வழக்​கு​களைப் பதிவு செய்​தனர்.

இந்த வழக்​கு​கள் எம்​.பி. எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடந்து வரு​கிறது. இந்த பிர​தான வழக்​கு​களின் அடிப்​படை​யில் செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் உள்​ளிட்​டோர் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றத்​தில் ஈடு​பட்​டுள்​ள​தாகக் கூறி அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தனி​யாக வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் கைதான செந்​தில் பாலாஜி ஓராண்​டுக்​குப் பிறகு உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார். இந்த வழக்கு விசா​ரணை சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது.

நவ.24-க்கு தள்ளிவைப்பு இந்த வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் உதவி​யாள​ரான கார்த்​தி​கேயன் மற்​றும் கணேசன் ஆகியோர் எம்​.பி.எம்​எல்​ஏ-க்​கள் நீதி​மன்​றத்​தில் தங்​களுக்கு எதி​ராக நிலு​வை​யில் உள்ள மோசடி வழக்​கில் இறுதி முடிவு எட்​டப்படும் வரை அமலாக்​கத் துறை தொடர்ந்​துள்ள இந்த வழக்கை விசா​ரிக்​கக் கூடாது என தடை கோரி​யும், சாட்சி விசா​ரணையை தள்ளி வைக்​கக்​கோரி​யும் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனுக்​கள் சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்​சைக்​காக அமெரிக்கா​வுக்கு சென்று திரும்​பிய அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் உள்​ளிட்ட 11 பேர் ஆஜராகினர். அமலாக்​கத் துறை தரப்​பில் இந்த மனுக்​களுக்கு பதிலளிக்க அவகாசம் கோரப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி, அமலாக்​கத் துறைக்கு அவகாசம்​ வழங்​கிவி​சா​ரணை​யை நவ.24-க்​குதள்​ளி வைத்​துள்​ளார்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in