அரசு கேபிள் டிவி டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் நியமனம்

அரசு கேபிள் டிவி டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் நியமனம்
Updated on
1 min read

அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு துல்லியமான டிஜிட்டல் காட்சியை வழங்கும் விதமாக தாலுகா அளவில் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் 45 லட்சம் அனலாக் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள், 25 லட்சம் டிஜிட்டல் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அனலாக் வாடிக்கையாளர்கள் படிப்படியாக டிஜிட்டல் வாடிக்கை யாளர்களாக மாறி வருகின்றனர். அதனால் டிஜிட்டல் சிக்னல்களை வலுப்படுத்த வேண்டியுள்ளது. டிஜிட்டல் சேவையை துல்லியமாக வழங்க, குறைந்த தூரத்தில் சிக்னல் பூஸ்டர்களை அமைக்க வேண்டும்.

அதன் காரணமாக, டிஜிட்டல் கேபிள் சிக்னல்களை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு கொண்டுசெல்ல தாலுகா அளவில் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in