தமிழக அரசு திறக்கவுள்ள குவாரிகளில் மணலுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

நாமக்கல்லில் செய்தியாளர்களுக்குப்  பேட்டியளித்த தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராஜசேகர். உடன், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர்.
நாமக்கல்லில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராஜசேகர். உடன், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

நாமக்கல்: அரசு திறக்​க​வுள்ள குவாரி​களில் மணலுக்கு குறைந்​த​பட்ச விலை நிர்​ண​யம் செய்ய வேண்​டும் என்று தமிழ்​நாடு மணல் லாரி உரிமை​யாளர்​கள் பாது​காப்பு சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இந்த சங்​கத்​தின் நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நாமக்​கல்​லில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் பங்​கேற்ற மாநிலத் தலை​வர் கே.​ராஜசேகர், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சுமார் 75 ஆயிரம் மணல் லாரி​கள் இயங்​கின. கடந்த 2 ஆண்​டு​களாக அரசு மணல் குவாரி​கள் மூடப்​பட்​ட​தால், லாரி உரிமை​யாளர்​கள் பலர் வாங்​கிய கடனை செலுத்த முடி​யாமல் லாரி​களை விற்​பனை செய்​து​விட்​டனர். தற்​போது 50 ஆயிரம் மணல் லாரி​கள் மட்​டுமே உள்​ளன.

இந்​நிலை​யில், நாமக்​கல் மாவட்​டம் நன்​செய் இடை​யாறு உட்பட தமிழகத்​தில் 8 இடங்​களில் மணல் குவாரி​கள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்​துள்​ளது.

குவாரி​கள் திறக்​கும் முன்​னர் மணல் லாரி உரிமை​யாளர்​கள் மற்​றும் மக்​கள் பிர​தி​நி​தி​களை அழைத்​துப் பேசி, மணலுக்கு குறைந்​த​பட்ச விலை நிர்​ண​யம் செய்து மக்​களுக்கு நேரடி​யாக வழங்க வேண்​டும். ஏற்​கெனவே குறைந்த விலை​யில் எம்​.​சாண்டை பொது​மக்​கள் பயன்​படுத்தி வரு​வ​தால், மணலுக்கு அதிக விலை இருந்​தால் வாங்க முன்​வர​மாட்​டார்​கள். மேலும், குத்​தகை​தா​ரர்​கள் மூலம் 2-வது விற்​பனை​யாக மணல் வழங்​கி​னால், பல்​வேறு முறை​கேடு​களும், விலை​யும் அதி​கரிக்​கும்.

எனவே, ஆன்​லைன் மூலம் பதிவு செய்து நேரடி​யாக மணல் விற்​பனை செய்ய வேண்​டும். அரசி​யல்​வா​தி​களுக்கு முன்​னுரிமை கொடுக்​காமல், பதிவுப் பட்​டியல்​படி மணல் வழங்கவேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்​. பொருளாளர்​ பரமசிவம்​, இணைச்​ செய​லா​ளர்​ சிவக்​கு​மார்​ உடனிருந்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in