தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்கியது

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்கியது
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணி தொடங்​கியது. வாக்​காளர் பட்​டியலில் தகு​தி​யான வாக்காளர்​கள் பெயர் இடம்​பெறும் வகை​யிலும், இரட்டை பதிவு​கள், இறந்​தவர்​கள் பெயர்​களை நீக்​கும் வகை​யிலும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்தை செயல்​படுத்த தேர்​தல் ஆணையம் முடி​வெடுத்​தது.

அதன்படி பிஹாரைத் தொடர்ந்​து, தமிழகம், புதுச்​சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்​கள், யூனியன் பிர தேசங்​களில் வாக்​காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி​களை மேற்​கொள்​வதற்​கான அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது. தொடர்ந்​து, அக்​.28-ல் முதல் கட்​டப் பணி​கள் தொடங்​கின. அதன்​படி பணி​களில் ஈடுபட உள்ள அலு​வலர்​களுக்​கான பயிற்​சி, அரசி​யல் கட்சிகளின் கருத்​துக்​கேட்புக் கூட்​டம் ஆகியவை நடத்​தப்​பட்​டன.

அதைத் தொடர்ந்​து, ஏற்​கெனவே வெளி​யிடப்​பட்ட பட்​டியல் அடிப்​படை​யில், அலு​வலர்​கள் வீடு​வீ​டாகச் சென்று கணக்​கெடுப்​புக்​கான விண்​ணப்ப படிவங்​களை வழங்கி பூர்த்தி செய்து பெறும் பணி நேற்று தொடங்​கியது. தமிழகம் முழு​வதும் 77 ஆயிரம் வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள், தங்​களுக்கு வழங்​கப்​பட்ட பகு​தி​யளவு பூர்த்தி செய்​யப்​பட்ட படிவங்​களை, சரி பார்த்து வீடு​வீ​டாகக் கணக்​கெடுப்பு நடத்​தும் பணி​களைத் தொடங்​கினர்.

சில பகு​திகளில் வீடு​வீ​டாகச் சரி​பார்த்​து, அலு​வலர்​கள் படிவங்​களை வழங்​கினர். சிலரிடம் பூர்த்தி செய்து உடனடி​யாக பெற்​றனர். மற்றவர்​களிடம் படிவங்​களை வழங்​கிச் சென்​றனர். சென்​னை​யில் 40 லட்சத்து 4,694 வாக்​காளர்​களுக்கு 3,718 வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்கள் மூல​மாக கணக்கீட்​டுப் படிவம் வீடு​வீ​டாக வழங்​கும் பணி தொடங்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை மாவட்​டத்​தில் உள்ள 16 பேரவைத் தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களில், வாக்​காளர் கணக்​கீட்​டுப் படிவத்தை வழங்​கு​வது தொடர்​பாக வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள் மற்​றும் உதவி வாக்​காளர் பதிவு அலு​வலர், வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​களுக்கு பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

வாக்​குச் ​சாவடி நிலை அலு வலர்​களால் வழங்​கப்​படும் இரட்டை படிவங்​களை, பொது ​மக்​கள் முழு​மை​யாகப் பூர்த்தி செய்து கையொப்​பத்​துடன், வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் மீண்​டும் வரும்​போது சமர்ப்​பிக்க வேண்​டும். படிவங்​கள் அனைத்​தும் டிச.4-ம் தேதிக்​குள் பெறப்​படும்.

அவ்​வாறு பெறப்​படும் படிவங்​களில் உள்ள வாக்​காளர்​களின் பெயர்​கள் மட்​டுமே வரைவு வாக்​காளர் பட்​டியலில் சேர்க்​கப்​படும். வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி​கள் குறித்த சந்​தேகங்​கள் ஏது​ம்​ இருப்​பின், ‘1950’ என்​ற கட்​ட​ணமில்​லா தேர்​தல்​ கட்​டுப்​​பாட்​டு தொலைபேசி எண்​ணை ​வாக்​​காளர்​கள்​ தொடர்​பு கொள்​ளலாம்​.

துணை ஆணையர் ஆய்வு: இதனிடையே தேர்தல் துணை ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, இயக்குநர் கே.கே. திவாரி நேற்று சென்னை வந்தனர். தேர்தல் அலுவலகத்தில் இருந்தபடி திருத்த பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். துணை தேர்தல் ஆணையர் மற்றும் இயக்குநர் இருவரும் இன்று மாவட்டங்களில் கள ஆய்வு செய்ய உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in