

தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசை தான் இருக்கிறது. அதுவரை மட்டுமே திமுகவால் ஆட முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது...‘‘ஒவ்வொரு ஆண்டும் தீவிர சுருக்கமுறை திருத்த முகாமையும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாமையும் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறைதான். மக்களை திசைதிருப்பி வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே திமுக அரசு இந்த எதிர்ப்பு நாடகத்தை நடத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் முறையிடப்பட்டது.
இருப்பினும் இறந்தவர்கள் பெயர்களை நீக்குவதில்லை. எஸ்ஐஆர் வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத்துக்கு திமுக சென்றால், எஸ்ஐஆர் வேண்டுமென்று அதிமுக உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும். தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசை தான் இருக்கிறது. அதுவரை மட்டுமே திமுகவால் ஆட முடியும். 2 அமாவாசைக்கு முன்பு அரசியலில் மாற்றங்கள் வரலாம்’’ என்றார்.