தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: நிரந்தரத் தீர்வு காண மத்திய மாநில அரசுகளுக்கு விஜய் கோரிக்கை

தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: நிரந்தரத் தீர்வு காண மத்திய மாநில அரசுகளுக்கு விஜய் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை மத்திய அரசும், தமிழக அரசும் காண வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன் என்று அக்கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மனவேதனையை அளிக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத் தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.” என்று விஜய் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in