

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர் (42). இவர், கோவைப்புதூர் லட்சுமி நகரில் வாழ்வியல் மையம் நடத்தி வந்தார். அவரது உறவினரான சீனிவாசன் (32) என்பவர் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சுகப்பிரசவத் துக்கு இலவசப் பயிற்சி அளிப்ப தாக விளம்பரம் செய்ததை அடுத்து எழுந்த புகாரின் பேரில் ஹீலர் பாஸ்கர் மற்றும் மேலாளர் சீனிவாசன் ஆகியோரை குனிய முத்தூர் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஹீலர் பாஸ்கர் நடத்தி வந்த மையத்தில் போலீஸார் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். அங்கு, அலோபதி மருத்துவத்துக் குப் பயன்படுத்தப்படும் உப கரணங்கள் சிலவற்றை கைப் பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அம்மையத்துக்கு ‘சீல்’ வைக்க வருவாய் கோட்டாட்சியரி டம் மனுதாக்கல் செய்ய இருப்ப தாகவும், ஹீலர் பாஸ்கரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.