

சொந்த படை பலம்... பக்கத்து வீட்டு பங்காளிகள் பலம்... இது எல்லாமும் இருந்தாலும் தேர்தலில் வெற்றிக்கு வைட்டமின் ‘ப’ பலம் அதி முக்கியம். அந்த பலத்தை பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கும் போது, தேர்தல் ஆணைய கெடுபிடிகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஆளும் தரப்பும் எதிர் தரப்பும் இப்போதே தொகுதி வாரியாக பங்கு பிரித்து அனுப்பும் வேலைகளில் தீவிரம் காட்டுகிறதாம்.
அதேசமயத்தில், வைட்டமின் ‘ப’ பலத்தில் ஆளும் தரப்பின் கல்லாப்பெட்டிகள் கொஞ்சம் ‘தாராளமாக’வே திறக்கப்படும் நிலை இருப்பதால், அதை எப்படி சமாளிப்பது என்று எதிரணி தரப்பு யோசிக்கிறதாம்.
அதனால், தங்களது கூட்டணி பங்காளியான தேசிய கட்சியிடம் விஷயத்தை கொண்டு போனவர்கள், “ஆளும் தரப்பின் வைட்டமின் ‘ப’ சப்ளைகளைக் கண்காணித்து முடக்காவிட்டால், அது நம்முடைய வெற்றிக்கு வேட்டு வைக்கும்” என்று தலைவர் ஷாவுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்களாம். உடனே இதற்கு ‘பச்சைக்’ கொடி காட்டிய தலைவர் ஷா, “பிஹார் தேர்தல் முடிந்ததும், ’அனைத்தையும்’ கவனிச்சுரலாம்” என நம்பிக்கை அளித்திருக்கிறாராம்.