

மதுரை: பழனிசாமி செய்த துரோகமே அவரை வீழ்த்தும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை நீக்கபழனிசாமிக்கு தகுதி இல்லை. ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சசிகலா மற்றும் என்னை துரோகிகள் என்று கூறுகிறார் பழனிசாமி. அவரை முதல்வர் பதவியில் அமரவைத்து விட்டு சிறைக்குச் சென்றவர் சசிகலா. அதற்குப் பிறகு என்னநடந்தது? மற்றவர்களை துரோகி கள் என்று சொல்லக்கூட பழனி சாமிக்கு தகுதியில்லை.
பசும்பொன்னுக்கு வந்து சென்ற செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியிருப்பதை, தென் தமி்ழக மக்கள் அவமானமாக கருதுவர். 2021 தேர்தலில் 104 சமுதாயமக்களுக்கு செய்த துரோகத்தால்தான் பழனிசாமி ஆட்சிக்கு வரமுடியாமல் போனது. அதேபோல, வரும் தேர்த லிலும் பழனிசாமி தோல்வியை சந்திப்பார். அவரது அழிவை அவரே தேடிக் கொண்டிருக்கிறார். அவரை வீழ்த்த வேறு யாரும் தேவையில்லை, அவர் செய்த துரோகமே அவரை வீழ்த்தி விடும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பழனிசாமியை வீழ்த்திவிட்டு, எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை மீண்டும்உருவாக்குவோம். அதற்காக எந்த ஆயுதத்தை எடுக்கப் போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.