

இவர்கள் ‘பவருக்கு’ வந்தால் கனவுத் தொழிற்சாலையையும் கபளீகரம் செய்துவிடுவார்கள் என ‘அம்மா’ காலத்திலிருந்தே ‘ஆலயக்’ கட்சியை அர்ச்சித்து வருகிறது ’மாளிகைக்’ கட்சி. ஆனால், இப்போது அந்தக் கட்சிக்கும் கனவுத் தொழிற்சாலைக்குள் கால்பதித்து கல்லாக்கட்டும் ஆசை வந்துவிட்டதாம்.
நமக்கும் இப்படியொரு தயாரிப்புக் கம்பெனி இருந்தால் கலெக்ஷனுக்கு கலெக்ஷனுமாச்சு... சமோசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ‘காவியங்களையும்’ வசூலில் சரித்திர சாதனை படைத்ததாகக் காட்டி ‘கறுப்பு’ சமாச்சாரங்களையும் ‘ஒய்ட்’ ஆக்கிக் கொள்ளலாம் என்று யோசனை சொல்லி இருக்கிறார்களாம்.
இதையடுத்து, எடக்கானவருக்கு எல்லாமுமான சேலத்தைச் சேர்ந்த ‘டெண்டர்’ கோவன் களத்தில் இறங்கி ‘கிரவுடு ஃபண்டிங்’ சிஸ்டத்தில் முன்னாள் மாண்புமிகு மக்களிடம் கலெக்ஷன் வேலையைத் தொடங்கி இருக்கிறாராம். ஆக, கூடிய சீக்கிரமே ‘ஜெயன்டுக்கு’ போட்டியாக ‘ஏஞ்சல்’ என்று ஒன்று வந்தாலும் வரலாம்.