Last Updated : 13 Aug, 2018 07:38 AM

 

Published : 13 Aug 2018 07:38 AM
Last Updated : 13 Aug 2018 07:38 AM

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய அரசின் வழக்கறிஞர்கள் நியமனம்

மத்தியில் பிரதமர் மோடி தலை மையிலான அரசு பொறுப் பேற்றதும் சென்னை உயர் நீதி மன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, மத்திய நிர்வாகத் தீர்ப்பா யம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு சார்பில் ஆஜராக 3 ஆண்டுக ளுக்கு முன்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் 3 ஆண்டுகால பதவிக் காலம் மார்ச் 14-ம் தேதியுடன் முடிவுற்றது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, சென்னையில் உள்ள மத் திய நிர்வாகத் தீர்ப்பாயம் ஆகிய வற்றுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு வழக்கறிஞர்களாக 149 பேரை நியமித்து மத்திய சட்டத்துறை கூடுதல் செயலர் எஸ்.ஆர்.மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத் துக்கு மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர்களாக கே.டி.ராகவன், ஜெ.மதனகோபால்ராவ், டி.வி. கிருஷ்ணமாச்சாரி உட்பட 25 பேரும், மத்திய அரசு வழக்கறி ஞர்களாக பி.ராமரத்தினம், எஸ்.மகேஷ் உட்பட 45 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை கிளைக்கு மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர்களாக எல்.விக்டோரிய கவுரி, டி.சரவ ணன், ஆர்.நந்தகுமார், பி.பால் பாண்டி. எஸ்.ஸ்ரீமதி, ஆர்.முருகப் பன், கே.பாலசுந்தரம், எம்.கார்த்தி கேய வெங்கடாச்சலபதி, எச்.வேல வதாஸ், ஜெ.அழகுராம்ஜோதி, எம்.கருணாநிதி, கே.ஆர்.லெட்சு மண் உட்பட 23 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற கிளைக்கு மத்திய அரசு வழக்கறிஞர்களாக ஏ.கண்ணன், ஜி.ராஜாராம், ஓ.அய் யர், எம்.இ.அப்பன், வி.குமரன் நாயர், பி.மாதவன்நாயர், வி.மலை யேந்திரன், எம்.ராஜேந்திரன், பாஸ் கரன் தீபா, வி.ஆறுமுகம், எம்.டி. பூர்ணச்சாரி உட்பட 36 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத் துக்கு மத்திய அரசு மூத்த வழக்கறிஞர்களாக சு.ஸ்ரீனி வாசன், கே.ராஜேந்திரன், ஆர்.சவுந்தர்ராஜன், சி.குழந்தைவேல், எம்.கிஷோர்குமார் உட்பட 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாஜக நிர்வாகி கள் கூறியது: கடந்த நியமனத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கும் மத்திய அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறை எந்தவித குற்றச் சாட்டுக்கும் இடமில்லாமல் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்பு களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மட்டும் மத்திய அரசு வழக்கறிஞர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் சரியாக ஆஜரா காமல் இருந்த பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கும் இந்த முறை பதவி மறுக்கப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x