தொடர் கனமழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வேலூர் விரிஞ்சிபுரம் பாலாற்றில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தை தரைப்பாலத்தில் நின்றபடி ரசித்த பொதுமக்கள்.
வேலூர் விரிஞ்சிபுரம் பாலாற்றில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தை தரைப்பாலத்தில் நின்றபடி ரசித்த பொதுமக்கள்.
Updated on
1 min read

வேலூர்: தொடர் மழை காரணமாக வேலூர் விரிஞ்சிபுரம் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளத்தை பொதுமக்கள் தரைப்பாலத்தில் நின்றபடி கண்டு ரசித்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரு கிறது. இதனால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக-ஆந்திர மாநில பாலாற்றுப் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பாலாற்றின் துணை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாலாற்றிலும் அதிகளவில் தண்ணீர் ஓடுகிறது.

அதன்படி, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பாலாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல் வதை விரிஞ்சிபுரம் தரைப்பாலம் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிறிதுநேரம் நின்று சீறிப்பாய்ந்து செல்லும் ஆற்று வெள்ளத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

பலர் தங்கள் கைப்பேசியில் பாலாற்றில் வெள்ளம் செல் வதை புகைப்படம் எடுத்து அதை நண்பர்களுக்கும், உற வினர்களுக்கும் அனுப்பி மகிழ்ந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் பொதுமக்கள் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ, மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம், ஆற்றில் தண்ணீர் குறைவாக வருகிறது என கடந்து செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in