

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தால் ஆறாத காயம், அழியாத வடு ஏற்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தேர்தலில் எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கும் எனக் கேட்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் திமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. கரூர் சம்பவத்தால் திமுகவுக்கு எந்தவொரு பாதிப்பும் வராது. இப்போது சொல்லப்படும் ஊகங்கள், கணிக்கப்படும் கணிப்புகள் போன்று தேர்தல் நடக்காது. அதேசமயம், புதிதாக வந்தவர் பெரிய அளவில் வெற்றிபெற்று விடுவார் என்ற வாதத்தையும் நான் ஏற்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.