Published : 23 Aug 2018 09:01 PM
Last Updated : 23 Aug 2018 09:01 PM

தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: பாடத்திட்ட செயலர் உதயச்சந்திரனும் மாற்றம்

தமிழகத்தில் ஆட்சிப்பணி மற்றும் துறைவாரியான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் விபரம் வருமாறு:

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், காதி மற்றும் கைத்தறி துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பவர் பைனான்ஸ் மற்றும் உட்கட்டமைப்புத்துறை தலைவராக பதவி வகிக்கும் தயானந்த் கட்டாரியா கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் துறை முதன்மைச்செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

குடிசைமாற்று வாரிய மேலாண் இயக்குனராக பதவி வகித்த ஷம்பு கல்லோலிகர் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை முதன்மைச்செயலாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கூடுதல் பொறுப்பு.

சுற்றுசூழல் மற்றும் வனத்துறை முதன்மைச்செயலாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் நசிமுத்தீன் எரிசக்தி துறை முதன்மைச்செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

அண்ணா மேலாண்பயிற்சி மைய இயக்குநர் டி.கே.ராமச்சந்திரன் இந்த சமய அறநிலையத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

அரசு பாடத்திட்ட செயலர் உதயச்சந்திரன் தொல்லியில் துறை ஆணையரக மாற்றப்பட்டுள்ளார்.

உயர் கல்வித்துறை முதன்மைச்செயலர் சுனில் பாலிவால், தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச்செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

சரக்கு சேகரிப்பு பராமரிப்புக்கழக மேலாண் இயக்குநராக பதவி வகிக்கும் சந்தோஷ் கே.மிஷ்ரா மின்னணு நிர்வாகத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் முன்னேற்றக்கழக தலைவராக பதவி வகிக்கும் டாகடர் சந்தோஷ் பாபு தகவல் தொழில்நுட்பத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக பதவி வகித்த அருண்ராய் தொழில்துறை கூடுதல் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

வணிகவரித்துறை (நிர்வாகம்) இணை ஆணையராக பதவி வகித்த மகேஷ்வரி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச்செயலராக பதவி வகிக்கும் மங்கத்ராம் ஷர்மா உயர்கல்வித்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி கல்வித்துறை துணை ஆணையராக பதவி வகிக்கும் மகேஷ்வரி ரவிகுமார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை ஆட்சியராக பதவி வகிக்கும் கே.வீரராகவராவ் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியராக பதவி வகிக்கும் அன்புச்செல்வன் கடலூர் ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பதவி வகிக்கும் கதிரவன் ஈரோடு மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் ஆட்சியராக உள்ள நடராஜன் மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

அச்சு மற்றும் எழுதுபொருள் இயக்குநராக பதவி வகிக்கும் ஜெயகாந்தன் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

அண்ணா மேலாண்பயிற்சி மைய கூடுதல் இயக்குநர் சண்முகசுந்தரம் சென்னை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகிக்கும் சுந்தரவல்லி வணிகவரித்துறை (அட்மின்) இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த தண்டபாணி அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பதவி வகிக்கும் ஜி.லதா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனராக பதவி வகிக்கும் ஆன்னி மேரி ஸ்வர்ணா ஊரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

கைத்தறி மற்றும் காதித்துறை முதன்மைச்செயலர் பனீந்தர் ரெட்டி அண்ணா மேலாண் பயிற்சி மைய இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக பதவி வகிக்கும் அஷோக் டோங்க்ரே குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

இந்து அறநிலையத்துறை ஆணையராக பதவி வகிக்கும் ஜெயா தமிழ்நாடு கிடங்கு கழக மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையராக பதவி வகிக்கும் கார்த்திகேயனுக்கு கூடுதலாக ஊரக நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

இது தவிர மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x