Published : 16 Aug 2018 08:07 AM
Last Updated : 16 Aug 2018 08:07 AM

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மழையால் நீர்வரத்து அதிகரிப்பு; தமிழக அணைகளின் நீர் இருப்பு நிலை என்ன?- பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டுகின்றன

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்தி ருப்பதை அடுத்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் மற்றும் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

பவானிசாகர் அணை நீர் மட்டம் 101.96 அடியாகவும், நீர் இருப்பு 30.2 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 43ஆயிரத்து 996 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றில் 47 ஆயிரத்து 700 கன அடி கன அடி நீரும், பாசனத்துக்காக கால்வாய்களில் விநாடிக்கு 2300 கன அடி என மொத்தம் 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் தற்போதைய நீா்மட் டம் 62.27அடி. நீா் இருப்பு 4,050 கனஅடி, நீர் வரத்து 2,089 மி.கனஅடி, வெளியேற்றம் 60 கனஅடி. 126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நேற்றைய நீா்மட்டம் 117.42 அடி. நீா் இருப்பு 85.60 மி.கனஅடி.

57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நேற்றைய நீா்மட்டம் 41.90அடி, நீர் இருப்பு 210.72 மி.கனஅடி. 52.50 அடி உயரமுள்ள சண்முகா நதி அணையின் நேற்றைய நீா்மட்டம் 31.10 அடி. நீா் இருப்பு 25.35 மி.கனஅடி.

திருவண்ணாமலை மாவட்டத் தின் முக்கிய அணையான சாத்த னூர் அணையின் கொள்ளளவு 119 அடி. தற்போதைய நீர் இருப்பு 91.70 அடி. 59.4 அடி கொள்ளள வுள்ள குப்பநத்தம் அணையின் நீர் இருப்பு 30.51 அடி. 22.97 அடி கொள்ளளவுள்ள மிருகண்டா நதி நீ்ர்த்தேக்க அணையின் நீர் இருப்பு 0.82 அடி. 62.32 அடி கொள்ளள வுள்ள செண்பகத்தோப்பு அணை யில் தற்போது 43.43 அடி நீர் இருப்பு உள்ளது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.85 அடி. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 800 கனஅடி நீர் வந்து கொண்டிருக் கிறது. சென்னையின் குடிநீருக்காக விநாடிக்கு 54 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. சேத்தியாத் தோப்பு அணைக்கட்டுக்கு 570 கனஅடி நீர் செல்கிறது. இந்த அணைக்கட்டில் தற்போது ஆறரை அடி தண்ணீர் உள்ளது. சேத்தியாத் தோப்பு அணைக்கட்டில் இருந்து வாலாஜா ஏரிக்கு விநாடிக்கு 420 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகி றது. ஐந்தரை அடி கொள்ளளவு உள்ள வாலாஜா ஏரியில் 3 அடி தண்ணீர் உள்ளது. வாலாஜா ஏரியில் இருந்து பெருமாள் ஏரிக்கு விநாடிக்கு 420 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் கீழணை முழு கொள்ளளவான 9 அடியை எட்டியுள்ளது. கல்லணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலி ருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுக்கொள்ளவை எட்ட ஒருசில அடிகளே உள்ளன.

மழையால் நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வந்தாலும் விழுப்புரம் மாவட்டத்தில் அணைகள் வறண்டே காணப்படுகின்றன. 36 அடி கொள்ளளவுள்ள கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை, 42 அடி கொள்ளளவுள்ள கோமுகி அணை, 32 அடி கொள்ளளவுள்ள வீடூர் அணைகள் வறண்டு உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x