கொளத்தூர் தொகுதியில் வளிம காப்பு துணை மின் நிலையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கொளத்தூர் தொகுதியில் வளிம காப்பு துணை மின் நிலையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
Updated on
1 min read

சென்னை: ​கொளத்​தூர் தொகு​தி​யில் ரூ.110 கோடி மதிப்​பீட்​டில் அமைக்​கப்​பட்ட வளிம காப்பு துணை மின் நிலை​யத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

வட சென்னை மக்​களின் நலனை கருத்​தில் கொண்டு தமிழ்​நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்​பில், கொளத்​தூர் சட்​டப்​பேர​வைத் தொகு​திக்கு உட்​பட்ட கணேஷ் நகர் பகு​தி​யில், வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ், தமிழ்​நாடு மின் தொடரமைப்​புக் கழகத்​தின் சார்​பில் 230/33 கி.வோ. வளிம காப்பு துணை மின் நிலை​யம் அமைக்​கும் பணிக்கு கடந்த 2023-ம்ஆண்டு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார். ரூ.110.92 கோடி செல​வில் பணி​கள் நிறைவடைந்த நிலை​யில் அதை முதல்​வர் நேற்று திறந்து வைத்​தார்.

இந்த துணைமின் நிலை​யத்​தின் மூல​மாக ஏற்​கெனவே இயக்​கத்​தில் உள்ள கொளத்​தூர், பெரி​யார் நகர், அன்னை நகர், நேர்மை நகர் ஆகிய 33/11 கி.வோ. துணைமின் நிலை​யங்​களுக்​கும், தற்​போது புதி​ய​தாக நிறு​வப்​பட்​டுள்ள கணேஷ் நகர் மற்​றும் மாதவரம் ரேடியன்ஸ் 33/11 கி.வோ. துணைமின் நிலை​யங்​களுக்​கும் மின்​சா​ரம் வழங்​கப்​படும்.

இந்த துணை மின் நிலை​யங்​களின் வாயி​லாக கொளத்​தூர், பெரி​யார் நகர், அண்ணா நகர், நேர்மை நகர், கணேஷ் நகர், மாதவரம் பகு​தி​களில் சுமார் 1லட்​சம் தொழில் மின் நுகர்​வோர், 1.50 லட்​சம் வணிக மின் நுகர்​வோர் மற்​றும் 3 லட்​சம் வீட்டு மின் நுகர்​வோர் பயன்​பெறு​வர்.

மேலும் கணேஷ் நகரில் உள்ள ஒருங்​கிணைந்த கல்​லூரி மாணவர்​களுக்​கான சமூகநீதி விடு​தி​யில் ரூ.12 லட்​சம் செல​வில் நிறு​வப்​பட்ட தானி​யங்கி குடிநீர் வழங்​கும் இயந்​திரத்தை திறந்​து​வைத்த முதல்​வர், கல்​லூரி மாணவர்​களுக்​கான சமூகநீதி விடு​தி​யைப் பார்​வை​யிட்​டு, அங்​குள்ள மாணவர்​களு​டன் கலந்​துரை​யாடி, விளை​யாட்டு உபகரணங்​களை வழங்​கி​னார். முன்​ன​தாக மின்​சா​ரத் துறை சார்​பில் நடந்த கண்​கவர் ட்ரோன் நிகழ்​வை​யும் முதல்​வர் கண்டு ரசித்​தார்.

நிகழ்ச்​சி​யில் நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​. நேரு, போக்​கு​வரத்து மற்​றும் மின்​சா​ரத் துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​. சிவசங்​கர், இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சரும், சிஎம்​டிஏ தலை​வரு​மான பி.கே.சேகர்​பாபு, பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை அமைச்​சர் சிவ.வீ. மெய்​ய​நாதன், மேயர் ஆர்​.பிரி​யா, நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் கலாநிதி வீரா​சாமி, கிரி​ராஜன், சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் தாயகம் கவி, வெற்​றியழகன், ஜோசப் சாமுவேல், தமிழ்​நாடு சேமிப்​புக் கிடங்கு நிறு​வனத்​தின் தலை​வர் ப.ரங்​க​நாதன், மின்​வாரி​யத் தலை​வர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், சென்​னைப் பெருநகர் குடிநீர் வழங்​கல் மற்​றும் கழி​வுநீரகற்று வாரிய மேலாண் இயக்​குநர் டி.ஜி.​வினய், பிற்​படுத்​தப்​பட்​டோர் நல ஆணை​யர் சீ.சுரேஷ்கு​மார், நகர் ஊரமைப்பு இயக்கக இயக்​குநர்​ பா.கணேசன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in