நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைப்பதே அப்துல் கலாமுக்கு செலுத்தும் நன்றிக் கடன்: 95-வது பிறந்த நாளில் தலைவர்கள் கருத்து

முன்னாள் குடியரசுத்  தலைவர் அப்துல் கலாமின்  95-வது பிறந்தநாளை முன்னிட்டு, 
சென்னையில் அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், உயர்கல்வித் துறை செயலாளர் பொ.சங்கர். செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், உயர்கல்வித் துறை செயலாளர் பொ.சங்கர். செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Updated on
1 min read

சென்னை: ​முன்​னாள் குடியரசுத் தலை​வர் மறைந்த ஏ.பி.ஜெ.அப்​துல் கலாமின் 95-வது பிறந்​த​நாளை​யொட்​டி, அவரது படத்துக்கு முதல்​வர் ஸ்​டா​லின் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தி​னர்.

முன்​னாள் குடியரசுத் தலை​வர் மறைந்த ஏ.பி.ஜெ.அப்​துல் கலாமின் 95-வது பிறந்​த​நாளை​யொட்​டி, சென்னை அண்ணா பல்​கலைக்​கழக வளாகத்​தில் அமைந்​துள்ள அவரது உரு​வச்​சிலைக்கு அரு​கில் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த உரு​வப் படத்​துக்கு தமிழக அரசு சார்​பில் செய்​தித்​துறை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன், சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோ​வி.செழியன், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், செய்​தித்​துறைச் செய​லா​ளர் வே.​ராஜா​ராமன், உயர்​கல்​வித் துறைச் செயலர் பொ.சங்​கர், செய்தி மக்​கள் தொடர்​புத்​துறை இயக்​குநர் இரா.​வைத்​தி​நாதன் உள்​ளிட்​டோர் மரி​யாதை செலுத்​தினர்.

அவருக்கு புகழாரம் சூட்டி சமூக வலைதள பக்​கத்​தில் தலை​வர்​கள் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: எப்​படிப்​பட்ட தடையை​யும் கல்​வியைக் கொண்டு கடந்​திடலாம், வாழ்​வில் உயர்ந்​திடலாம் என்று வாழ்ந்து காட்​டிய​வர் முன்​னாள் குடியரசுத் தலை​வர் ஏ.பி.ஜெ.அப்​துல் கலாம். உயர்​கல்விக்​காக திமுக அரசு செயல்​படுத்தி வரும் திட்​டங்​களை நமது மாணவர்​கள் நன்கு பயன்​படுத்​திக் கொண்​டு, இந்​தி​யா​வின் முன்​னேற்​றத்​துக்​கும் தன்​னிறைவுக்​கும் உழைத்​தால், அது​தான் அவருக்​குச் செலுத்​தும் மிகச்​சிறந்த நன்​றிக்​கடன்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தேசத்​தின் கடைக்​கோடி​யில் எளிய குடும்​பத்​தில் பிறந்​து, தமிழ்​வழிக் கல்வி பயின்​று, தனது அசா​தாரண திறமை​யால் தாய்​நாட்​டின் முதல் குடிமக​னாக உயர்ந்த சரித்​திர நாயகன். அவர் வகுத்​துக் கொடுத்த லட்​சி​யப் பாதை​யில் தொடர்ந்து பயணித்​து, வளமான இந்​தி​யாவை உரு​வாக்க உறு​தி​யேற்​போம்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: எப்​போதும் மாணவர்​களை​யும் இளைஞர்​களை​யும் நம்​பிக்​கை​யுடன் முன்​னேற்​றத்​தின் பாதை​யில் வழிநடத்​தி, அவர்​களிடம் கனவு​களை விதைத்து வந்​தவர். அவர் கனவு கண்ட ‘வல்​லரசு இந்​தி​யா’ உரு​வாக நாம் ஒவ்​வொரு​வரும் உறுதி ஏற்​போம்.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: இளைஞர்​களுக்கு அவர் கூறிய அறி​வுரைகள் என்​றென்​றும் நினை​வு​கூரத்​தக்​கது.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: நாட்டு மக்​களின் இதயங்​களில் சிகர​மாகக் குடி​யிருக்​கும் அப்​துல்கலாமின் தேசப்​பற்​றை​யும், தேசத்​துக்​காக அவர் ஆற்​றிய பணி​களை​யும் போற்றி வணங்​கு​வோம்.

நாம் தமிழர் கட்​சித் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: தமிழ்​வழி​யில் படித்​தால், மண்ணை மட்​டுமல்ல விண்​ணை​யும் ஆளலாம் என உலகுக்கு உணர்த்​திய அறி​வியல் ஞானி. இவ்​வாறு தெரி​வித்​துள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in