இந்த நிதி ஆண்டுக்கு ரூ.2,915 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்

இந்த நிதி ஆண்டுக்கு ரூ.2,915 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்
Updated on
1 min read

சட்டப்பேரவையில், இந்த 2025-26-ம் நிதி ஆண்டுக்கு ரூ.2,914.99 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக பேரவையில் அவர் பேசியதாவது: நடப்பு (2025-26) நிதி ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,914.99 கோடி நிதியை ஒதுக்க வழிவகை செய்கிறது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, புதிய பணிகள் மற்றும் புதிய துணைப் பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்டவற்றுக்கு, சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்
டுள்ள தொகையை அந்த நிதிக்கு ஈடுசெய்வதும் இந்த துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி மறைந்த, ஓய்வுபெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க வழிவகை முன்பணமாக ரூ.1,137.97 கோடியை அரசு அனுமதித்துள்ளது. அதேபோல, கடந்த 2024-ம் ஆண்டு பெஞ்சல் புயல் பாதிப்புகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 2025-26-ல் பெறப்பட்ட உதவித்தொகை ரூ.522.34 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றம் செய்ய அரசு அனுமதித்துள்ளது. அதேபோல, இந்த ஆண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்த, கூடுதல் தொகை ரூ.469.84 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in