திமுக நடவடிக்கைகளுக்கு மக்கள் மன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும்: அண்ணாமலை நம்பிக்கை 

திமுக நடவடிக்கைகளுக்கு மக்கள் மன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும்: அண்ணாமலை நம்பிக்கை 
Updated on
1 min read

கோவை: ​தி​முக அரசின் நடவடிக்​கைகளுக்கு மக்​கள் மன்​றத்​தில் நல்ல தீர்ப்பு கிடைக்​கும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலைவர் அண்​ணா​மலை கூறி​னார்.

கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கரூர் விவ​காரம் தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் பேசிய முதல்​வர், அரசின் மீதும், காவல் துறை மீதும் தவறில்லை என்று கூறி​யுள்​ளார். பாது​காப்​புப் பணி​யில் 606 போலீ​ஸார் ஈடு​பட்​ட​தாக​வும் முதல்​வர் கூறியுள்​ளார்.

ஆனால், ஏடிஜிபி டேவிட்​சன் 500 பேர் பணி​யாற்​றிய​தாக தெரி​வித்​துள்​ளார். இவ்​வாறு முன்​னுக்​குப் பின் முரணான தகவல்​களைக் கூறு​வது கண்​டிக்​கத்​தக்​கது. சிபிஐ-க்கு ஒத்​துழைப்பு வழங்​கி, உண்​மைக் குற்​ற​வாளி​களை கண்​டறிய தமிழக அரசு உதவ வேண்​டும். கரூர் சம்​பவத்​துக்கு யார் காரணம் என்​பதும் சிபிஐ விசா​ரணை​யில் தெரிய​வரும்.

நிகழ்ச்சி நடத்​துபவர்களுக்​கும் பொறுப்பு உள்​ளது. ஆனால், அவர்​கள் மீது மட்​டும்​தான் தவறு என்று கூறு​வதை நாங்​கள் எதிர்க்கிறோம். 41 பேர் உயி​ரிழந்த பின்​னர் ஒரு அரசு அதி​காரி மீது​கூட ஏன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்​க​வில்லை? சென்னையில் சாலை​யில் நடந்த மோதல் சம்​பவத்​துக்கு அண்​ணா​மலை​தான் காரணம் என்று திரு​மாவளவன் கூறி​யுள்​ளார்.

அவர் முதலில் நாகரி​க​மான அரசி​யலுக்கு வர வேண்​டும். நான் காவல் துறை​யில் பணி​யாற்​றிய​போது பல ரவுடிகளை கையாண்டவன். எனவே, மிரட்​டல், உருட்​டல் என்​னிடம் எடு​ப​டாது.

விசாகப்​பட்​டினத்​தில் சந்​திர​பாபு நாயுடு 15 பில்​லியன் டாலர் மதிப்​பிலான கூகுள் நிறு​வனத்​தின் ஏஐ டேட்டா மையத்தை கொண்டு​வந்​து​விட்​டார். தமிழக தொழில் துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா, முதல்​வரை ஏமாற்றி வரு​கிறார்​.

தி​முக​வின் நடவடிக்​கைகளுக்கு 2026-ம் ஆண்டு நடை​பெறும் தேர்​தலின்​போது மக்​கள்மன்​றத்​தில் நல்ல தீர்ப்பு கிடைக்​கும்​. இவ்வாறு அண்​ணா​மலை கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in