Published : 15 Oct 2025 11:29 AM
Last Updated : 15 Oct 2025 11:29 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 17 வட்டாட்சியர்களை ஆட்சியர் மீ.தங்கவேல் நேற்று (அக். 14ம் தேதி) பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டாட்சியர் பெ.மோகன்ராஜ் கரூருக்கும், அங்கிருந்த ஆர்.குமரேசன் டாஸ்மாக் உதவி மேலாளராகவும், அங்கிருந்த எஸ்.மதிவாணன், குளித்தலை (இருப்பு கரூர்) ஆதி திராவிட நல தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த பி.சத்தியமூர்த்தி மண்மங்கலம் வட்டாட்சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
கடவூர் வட்டாட்சியர் பெ.மணிவண்ணன் புகழூர் சமூக பாதுகாப்பு தி ட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த எம்.பிரபா, புகழூர் வட்டாட் சயராகவும், அங்கிருந்த கே.தனசேகரன், (தேர்தல்கள்) தனி வட்டாட் சியராகம், அங்கிருந்த சு.முருகன், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட் சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் அ.ஈஸ்வரன் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த ஆர்.விஜயா கிருஷ்ணராயபுரத்திற்கும், அங்கிருந்த கி.பிரபாகர், அரவக்குறிச்சிக்கும், அங்கிருந்த என்.மகேந்திரன், கரூர் நெடுஞ்சாலைகள் நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த வை.அமுதா, கரூர் தேசிய நெடுஞ்சாலைகள் நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் தேசிய நெடுஞ்சாலைகள் நிலம் எடுப்பு தனி வட்டாட்சியர் எஸ்.சந்தானசெல்வன், அரவக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த எம்.பி.அமுதா கரூர் டாஸ்மாக் மேற்பார்வை அலுவலராகவும், அங்கிருந்த கே.யசோதா மண்மங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த எம்.ராஜாமணி கடவூர் வட்டாட்சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய பணியிடங்களில் உடனே பணியேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வுத்தரவு தொடர்பாக மேல்முறையீடோ, விடுப்போ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அனுமதிக்கப்பட்ட பணியேற்பிடை காலத்தினை விட கூடுதலாக எடுக்கப்படும் விடுப்புகள், மருத்துவ சான்றில்லா ஊதியமில்லாத அசாதாரண விடுப்பாக கருதப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT