மாநகராட்சியின் 16 சென்னை பள்ளிகளில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள்

மாநகராட்சியின் 16 சென்னை பள்ளிகளில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யின் சென்னை பள்​ளி​களில் ஏற்​கெனவே குடிநீர் சுத்​தி​கரிப்பு இயந்​திரம் மூலம் நாளொன்​றுக்கு 250 லிட்​டர் குடிநீர் வழங்​கப்​பட்டு வந்​தது. தற்​போது மாணவர்​களின் கூடு​தலாக பாது​காக்​கப்​பட்ட குடிநீர் வழங்​கு​வதற்​காக முதல்​ கட்​ட​மாக ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பயிலும் 16 பள்​ளி​களில் ரூ.1.60 கோடி மதிப்​பீட்​டில் 16 திறன்​மிகு தானி​யங்கி குடிநீர் வழங்​கும் இயந்​திரங்​கள் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி கொளத்​தூர், திரு​வான்​மியூர், வேளச்​சேரி, தரமணி, மடு​வின்​கரை, புதிய வண்​ணாரப்​பேட்​டை, கே.கே.நகர் சென்னை மேல்​நிலைப் பள்​ளி​கள், எம்​.எச்​.​சாலை, மேற்கு சைதாப்​பேட்​டை, புல்லா அவென்​யூ, புத்தா தெரு, மார்க்​கெட் தெரு சென்னை பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​கள், செம்​மஞ்​சேரி மற்​றும் எம்​.ஜி.ஆர். நகர்சென்னை நடுநிலைப் பள்​ளி​கள், ஜோன்ஸ் தெரு சென்னை தொடக்​கப் பள்​ளி, சைதாப்​பேட்டை சென்னை ஆண்​கள் மேல்​நிலைப் பள்ளி ஆகிய 16 பள்​ளி​களில் இந்த இயந்​திரங்​கள் நிறு​வப்பட உள்​ளன.

அதன் அடிப்​படை​யில் தற்​போது செனாய் நகர் புல்லா அவென்​யூ, மார்க்​கெட் தெரு மற்​றும் சைதாப்​பேட்டை ஆகிய 3 சென்னை பள்ளி​களில் தானி​யங்கி குடிநீர் வழங்​கும் இயந்​திரங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த 16 சென்னை பள்​ளி​களில் திறன்​மிகு தானி​யங்கி குடிநீர் வழங்​கும் இயந்​திரத்தை தொடங்கி வைக்​கும் வித​மாக புல்லா அவென்​யூ​வில் உள்ள சென்னை பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் ரூ.10 லட்​சம் மதிப்​பீட்​டில் அமைக்​கப்​பட்ட குடிநீர் இயந்​திரத்தை மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்​வில் மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணை​யர் க.கற்​பகம், மத்​திய வட்​டார துணை ஆணை​யர் எச்​.ஆர்​.க​வுஷிக், நிலைக்​குழுத் தலை​வர்​கள் நே.சிற்​றரசு, த.விசுவ​நாதன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in