ஜி.கே.மணி, அருளின் பதவியை பறிக்க கோரி பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட 3 பாமக எம்எல்ஏக்கள்

சட்டப்பேரவை பாமக தலைவரான ஜி.கே.மணி, கொறடாவான அருள் ஆகியோரின்  பதவியை பறிக்​கக் கோரி நேற்று சட்டப்பேரவை வளாகத்​தில் தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​ பாமக 3 எம்​எல்​ஏக்​கள்.படம்: எல்.சீனிவாசன்
சட்டப்பேரவை பாமக தலைவரான ஜி.கே.மணி, கொறடாவான அருள் ஆகியோரின் பதவியை பறிக்​கக் கோரி நேற்று சட்டப்பேரவை வளாகத்​தில் தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​ பாமக 3 எம்​எல்​ஏக்​கள்.படம்: எல்.சீனிவாசன்
Updated on
1 min read

சென்னை: பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி, கொறடா அருள் பதவியை பறிக்​கக் கோரி சட்​டப்​பேரவை வளாகத்​தில் பாமக எம்​எல்​ஏக்​கள் 3 பேர் தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்டது. பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி இடையே உச்​சக்​கட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. இந்​நிலை​யில், தமிழக சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் நேற்று தொடங்​கியது.

இதில் பங்​கேற்க வந்த அன்​புமணி தரப்பு பாமக எம்​எல்​ஏக்​கள் வெங்​கடேஸ்​வரன், சிவகு​மார், சதாசிவம் ஆகியோர் சட்​டப்​பேரவை வளாகத்​தில் தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது, சட்டப்​பேரவை பாமக குழு தலை​வர் பதவி​யில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வேண்​டும். எம்​எல்ஏ அருளின் கொறடா பதவியை பறிக்க வேண்​டும்.

தரு​மபுரி எம்​எல்ஏ வெங்​கடேஸ்வரனை ​பேரவை பாமக குழுதலை​வ​ராக​வும், மயிலம் எம்​எல்ஏ சிவகு​மாரை கொறடா​வாக​வும் நியமிக்க கோஷமிட்​டனர். அப்​போது, அவர்​கள் செய்​தியாளர்​களிடம் கூறுகை​யில், “எங்​களது கோரிக்கை தொடர்​பாக ஏற்​கெனவே பேரவை தலை​வரிடம் கடிதம் கொடுத்​தும், எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

அதனால், போராட்​டத்​தில் ஈடு​படு​கிறோம். பேர​வை​யில் பாமக குழு தலை​வர், துணை தலை​வர் மற்​றும் கொற​டாவுக்கு இருக்​கைகளை தனி​யாக வழங்க வேண்​டும் என்று பேரவை தலை​வரிடம் நாங்​கள் கோரிக்கை வைத்​தோம். பின்​னர் பேசி கொள்​ளலாம் என்று பேரவை தலை​வர் தெரி​வித்​துள்​ளார். எங்​களுக்கு தனி இடம் வழங்க வேண்​டும்” என்​றனர். இதனால், சட்​டப்​பேரவை வளாகத்​தில் பரபரப்பு ஏற்​பட்​டது.

ஜி.கே. மணி கருத்து: இதுகுறித்து ஜி.கே.மணி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “பாமக எம்​எல்​ஏக்​கள் 2 பிரி​வாக செயல்​படு​வது வருத்​தமளிக்​கிறது. பாமகவை உரு​வாக்​கிய ராம​தாஸ் எந்த பதவிக்​கும் போகாத ஒரு தலை​வர். 45 ஆண்​டு​களாக ஒற்​றுமை​யாக இருந்த பாமக​வுக்கு இது மிகப்​பெரிய சோதனை. பாமக​வில் 5 எம்​எல்​ஏக்​களை நியமித்​தவர் ராம​தாஸ். அவருக்கே முழு அதி​காரம் உள்​ளது. அவரது வழி​யில் நாங்​கள் தற்​போது பயணிக்​கிறோம். கட்​சிக்​குள்ளே போராடு​வது துர​திஷ்ட​வச​மானது” என்​றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in