தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை போனஸ்

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை போனஸ்
Updated on
1 min read

சென்னை: தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவின் விவரம்: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக மின்வாரியத்தில் உள்ள நிறுவனங்கள் மின் பகிர்மான, உற்பத்தி, பசுமை எரிசக்தி, தொடரைப்பு கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் முழுநேர ஊழியர்களுக்கும், பயிற்சியில் உள்ள கள உதவியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன், அலுவலக உதவியாளர்களுக்கும், முழுநேர மற்றும் பகுதிநேர தூய்மை பணியாளர்களுக்கும் 2024- 25ம் நிதியாண்டில் முழுமையாக பணியாற்றி இருந்தால் போனஸ் வழங்கப்படும்.

மின்வாரிய பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீதம் கருணைத்தொகை வழங்கப்படும். அதில் போனஸ் தொகை அதிகபட்சமாக ரூ.6,997-ம், கருணைத்தொகை ரூ.9,803-ம் என மொத்தம் ரூ.16,800 வரை போனஸாக வழங்கப்படும்.

மேலும் ஓய்வுபெற்ற ஊழியர்கள், பதவி உயர்வு பெற்றவர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் 2024- 25 காலத்தில் பணியில் இருந்தால் அவர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். அக்.15-க்குள் (இன்று) அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in