ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சிகிச்சை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்திய மருத்துவர்கள்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்திய மருத்துவர்கள்.
Updated on
1 min read

சென்னை: ர​யில் விபத்​தில் சிக்கி துண்​டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் சாதனை படைத்​துள்​ளனர்.

இது தொடர்​பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ராமன் கூறிய​தாவது: பிஹாரைச் சேர்ந்த 28 வயதான தொழிலாளி ஒரு​வர், கடந்த செப்​.26-ம் தேதி சென்​னை​யில் ரயில் விபத்​தில் சிக்கி பலத்த காயமடைந்​தார்.

இதில் அவரது இடது கை தோள்​பட்டை வரை துண்​டானது. வலது கையும் மணிக்​கட்​டுக்கு மேல் சிதைந்​து​விட்​டது. இரு கைகளும் செயல்பட முடி​யாத நிலை​யில், அவர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டு, தீவிர சிகிச்சை பிரி​வில் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது.

ஒட்​டுறுப்பு அறுவை சிகிச்சை பேராசிரியர் மருத்​து​வர் பி.​ராஜேஸ்​வரி, உதவிப் பேராசி​யர்​கள் உ.ரஷிதா பேகம், வி.எஸ்​. வளர்​ம​தி, வி.சுவே​தா, முது​நிலை மருத்​து​வர்​கள், ஷோனு, அன்​னபூரணி, விக்​ரம், சந்​தோஷினி, மயக்​க​வியல் நிபுணர் ஜி.சண்​முகப்​பிரியா ஆகியோர் அடங்​கிய குழு​வினர், அந்த நபருக்கு கைகளை மாற்றி பொருத்​தும் சிகிச்சை மேற்​கொள்ள முன்​வந்​தனர்.

துண்​டான இடது கையின் பகு​தி​யை, வலது முழங்​கை​யில் இணைத்​தனர். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்​சை​யின்​போது, எலும்பு கட்​டமைப்​பு, தசை, நரம்பு மற்​றும் ரத்​தக் குழாய்​கள் மறுசீரமைக்​கப்​பட்​டன. மிக நுட்​ப​மாக மேற்​கொள்​ளப்​பட்ட இந்த சிகிச்​சை​யின் மூல​மாக வலது கையில் ரத்த ஓட்​டம் செல்ல தொடங்​கியது.

பின்​னர், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்​றப்​பட்​டார். கையை முழு​மை​யாக பயன்​பாட்​டுக்​குக் கொண்​டுவர இயன்​முறை சிகிச்சை அளிக்​கப்பட உள்​ளது. இது​போன்று கைகளை மாற்றி பொருத்​தும் சிகிச்சை இந்​தி​யா​விலேயே இதற்கு முன்பு ஒரேயொரு முறை​தான் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. உலக அளவில் 3 சிகிச்​சைகள் மட்​டுமே மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

‘கி​ராஸ் ஹேண்ட் ரீ ப்ளான்​டேஷன்’ எனப்​படும் இந்த வகை சிகிச்சை அரசு மருத்​து​வ​மனை​களில் மேற்​கொள்​ளப்​படு​வது இதுவே முதன்​முறை. மிக​வும் சவால் நிறைந்த அந்த சிகிச்​சையை அரசு மருத்​து​வர்​கள் சாத்​தி​ய​மாக்​கி​யுள்​ளனர். இரு கைகளை​யும் இழந்​திருந்த அவருக்கு இந்த சிகிச்​சை​யின் மூலம் குறைந்​த​பட்​சம் ஒரு கை மீட்​டெடுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in