நாகை அருகே கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை அருகே கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
Updated on
1 min read

நாகப்பட்டினம்: ​நாகை அருகே கடலில் நேற்று முன்​தினம் இரவு மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த தமிழக மீனவர்​களைத் தாக்​கி, மீன்​கள், டீசல், வலைகள், செல்​போன்​களை இலங்கை கடற்​கொள்​ளை​யர்​கள் கொள்​ளை​யடித்​துச் சென்​றனர்.

நாகை மாவட்​டம் புஷ்பவனம் கிராமத்​தைச் சேர்ந்த ரா.கங்​கை​ நாதன்​(40) என்​பவருக்​குச் சொந்​த​மான படகில் மறு​வரசன்​(37), வெங்​கடேஷ்(31), ஞானப்​பிர​காசம்​(31), சந்​தோஷ்(27) ஆகிய 4 மீனவர்​கள் நேற்று முன்​தினம் புஷ்பவனத்​துக்கு கிழக்கே 10 கடல் மைல் தொலை​வில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, ஒரு படகில் வந்த இலங்கை கடற்​கொள்​ளை​யர்​கள் 3 பேர், வாளை காண்​பித்து தமிழக மீனவர்​களை மிரட்​டி, தாக்​கி, மீனவர்​கள் வைத்​திருந்த 50 கிலோ மீன்​கள், 30 லிட்​டர் டீசல், டார்ச் லைட், சிக்​னல் லைட், 2 செல்​போன்​கள் ஆகிய​வற்​றைப் பறித்​துச் சென்​றனர்.

இதே​போல, புஷ்பவனத்​தைச் சேர்ந்த கோ.கிருஷ்ண​சாமி என்​பவருக்​குச் சொந்​த​மான பைபர் படகில் சென்று கோடியக்​கரைக்கு கிழக்கே 8 கடல் மைல் தொலை​வில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த விக்​னேஸ்​வரன்​(30), சந்​துரு(20), சத்​தி​யசீலன்​(29) ஆகியோரை மிரட்​டி, 20 லிட்​டர் டீசல், வலை, டார்ச் லைட் ஆகிய​வற்​றை​யும், மு.​ராஜகோ​பால் என்​பவருக்​குச் சொந்​த​மான பைபர் படகில் சென்று மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த ராஜகோ​பால்​(40), சதீஷ்(35), திரு​நாவுக்​கரசு(30), ஜோதி​மணி(28) ஆகியோரை மிரட்டி டீசல், வலை, டார்ச் லைட், செல்​போன்​கள் ஆகிய​வற்​றை​யும் பறித்​துச் சென்​றுள்​ளனர். இலங்கை கடற்​கொள்​ளை​யர்​களின் தாக்​குதலுக்கு உள்​ளான மீனவர்​கள் அனை​வரும் நேற்று காலை கரை திரும்​பினர். இந்த கொள்​ளைச் சம்​பவம் மீனவர்​களிடையே அச்​சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in