மேட்டூருக்கு நீர்வரத்து விநாடிக்கு 59,123 கனஅடியாக அதிகரிப்பு: நீர் மட்டம் ஒரே நாளில் 2.70 அடி உயர்வு

மேட்டூருக்கு நீர்வரத்து விநாடிக்கு 59,123 கனஅடியாக அதிகரிப்பு: நீர் மட்டம் ஒரே நாளில் 2.70 அடி உயர்வு
Updated on
1 min read

சேலம்​/தரு​மபுரி: மேட்​டூர் அணைக்​கான நீர்​வரத்து விநாடிக்கு 59,123 கனஅடி​யாக அதி​கரித்த நிலை​யில், அணை​யின் நீர் மட்​டம் ஒரே நாளில் இரண்​டரை அடிக்கு மேல் உயர்ந்​தது. தென்​மேற்கு பரு​வ​மழைக் காலம் முடிவடைய உள்ள நிலை​யில், காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் சில நாட்​களுக்கு முன்​னர் கனமழை கொட்​டியது. இதனால் காவிரி​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்டு மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது.

கடந்த 10-ம் தேதி விநாடிக்கு 6,033 கனஅடி​யாக இருந்த நீர் வரத்​து, நேற்று முன்​தினம் 29,540 கனஅடி​யாக​வும், நேற்று 59,123 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது. நீர் வரத்து அதி​கரிப்​பின் காரண​மாக அணை​யின் நீர் மட்​டம் 112.48 அடி​யில் இருந்து நேற்று 115.18 அடி​யாக உயர்ந்​தது. குறிப்​பாக ஒரே நாளில் 2.70 அடி அளவுக்கு நீர் மட்​டம் உயர்ந்​தது.

அணை​யின் நீர் இருப்பு 81.98 டிஎம்​சி​யில் இருந்​து, ஒரே நாளில் 4 டிஎம்சி அதி​கரித்​து, நேற்று 85.98 அடி​யாக உயர்ந்​தது. அணை​யில் இருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி​யும், கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி​யும் நீர் திறக்​கப்​பட்டு வரு​வது தொடர்​கிறது.

அணைக்​கான நீர் வரத்து அதி​க​மாக உள்ள நிலை​யில் நீர் வளத்​துறை அலு​வலர்​கள், அணை​யில் உள்ள வெள்​ளக்​கட்​டுப்​பாட்டு அறை​யில் இருந்​த​படி, நீர் வரத்தை தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர். நீர் வரத்து இதே அளவில் தொடர்ந்​தால் ஓரிரு நாளில் மேட்​டூர் அணை நீர் மட்​டம் 120 அடியை எட்டி மீண்​டும் நிரம்​பும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஒகேனக்​கல்​லில்​... இதனிடையே, தரு​மபுரி மாவட்​டம் ஓகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, அன்று இரவு முதல் குறைய தொடங்​கியது. இந்​நிலை​யில் நேற்று மாலை 43 ஆயிரம் கனஅடி​யாக நீ்ர்​வரத்து பதி​வானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in