உலக மன ஆரோக்கிய நாளை முன்னிட்டு, சென்னை நுங்கம்பாக்கம், எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் மோகன் ராம், மருத்துவர் கவுதம் உடுப்பி, எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் அர்ச்சனா பிரசாத், உளவியல் துறை தலைவர் காயத்ரி ஸ்வேதா, சென்னை பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை தலைவர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

மனநலப் பிரச்​சினை ஏற்​பட்​டால் தாமதமின்றி மருத்​து​வரை அணுக வேண்​டும்: மனநல மருத்​து​வர் கவுதம் அறி​வுறுத்​தல்

Published on

சென்னை: உலக மன நல தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதை யொட்​டி, சென்னை பல்​கலைக்​கழக உளவியல் துறை, எம்​ஓபி வைஷ்ணவ் கல்​லூரி​யின் உளவியல் துறை மற்​றும் டாக்​டர் கவுதம் நரம்​பியல் மையம் சார்​பில் நுங்​கம்​பாக்​கம் எம்​ஓபி வைஷ்ணவ் கல்​லூரி​யில் விழிப்​புணர்வு நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற சிறப்பு விருந்​தினர்​கள் பேசி​ய​தாவது:

மருத்​து​வர் கவுதம் உடுப்​பி: உடல் உறுப்​பு​கள் பாதிக்​கப்​பட்​டால் உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறோம். ஆனால், மனநலம் பாதிக்​கப்​பட்​டால் பலரும் அதை சரி​யாக கவனிப்​ப​தில்​லை. போகப் போக சரி​யாகி​விடும் என் கின்​றனர். இது சரியல்ல. மனநலப் பிரச்​சினை என்​பது மூளை​யுடன் தொடர்​புடையது. எனவே, உடல் பிரச்​சினைக்கு மருத்​துவ ஆலோ​சனை பெறு​வதைப் போல​வே, மூளை​யில் பிரச்​சினை ஏற்​பட்​டாலும், தாமதம் செய்​யாமல் உடனடி​யாக அதற்​கான மருத்​து​வரை அணுகி ஆலோ​சனை பெற வேண்​டும்.

நடிகர் மோகன்​ராம்: நடிகர்​கள் அதிக அளவில் மனநலம் சார்ந்த பிரச்​சினைக்கு ஆளாகின்​றனர். எனக்கு தெரிந்து நடிகர்​கள் பலரும் தேவையற்ற கவலை, மன அழுத்​தம் போன்ற பிரச்​சினை​களை எதிர்​கொள்​கின்​றனர். வெளி​நாட்டு திரைப்​படங்​களில் மனநலப் பிரச்​சினை​களை நல்ல கதை​யம்​சத்​தோடு வழங்​கு​கின்​றனர்.

மனநலப் பிரச்​சினை தொடர்​பாக திரைப்படம் எடுப்​பவர்​கள் பொறுப்​புணர்​வுடன் செயல்பட வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் பேசினர். இந்த நிகழ்ச்​சி​யில் எம்​ஓபி வைஷ்ணவ் கல்​லூரி முதல்​வர் அர்ச்​சனா பிர​சாத், உளவியல் துறை தலை​வர் காயத்ரி
ஸ்வே​தா, சென்னை பல்​கலைக்​கழக உளவியல் துறை தலை​வர் சசிகலா, மருத்​து​வர்​கள், கல்​லூரி மாணவர்​கள் பங்​கேற்​றனர்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in