தேர்தல் விரோதக் கொலையில் 9 பேருக்கு ஆயுள்: கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வெளியானதும் அவர்களை போலீஸார்  சிறைக்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது அவர்கள் தலையில் அடித்துக் கொண்டு கதறியபடி வந்தனர்.
கடலூர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வெளியானதும் அவர்களை போலீஸார் சிறைக்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது அவர்கள் தலையில் அடித்துக் கொண்டு கதறியபடி வந்தனர்.
Updated on
1 min read

கடலூர்: ஊ​ராட்சி மன்ற தேர்​தலின் போது நடை​பெற்ற கொலை தொடர்​பான வழக்​கில், கடலூர் நீதி​மன்​றம் 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில். கடலூர் வட்​டம் தூக்​கணாம்​பாக்​கம் அருகே உள்ள பள்​ளிப்​பட்டு ஊராட்சி மன்ற தலை​வர் பதவிக்கு ராமச்​சந்​திரன், ரவி ஆகியோர் போட்​டி​யிட்​டனர். அதே பகு​தி​யைச் சேர்ந்த ஜனார்த்​தனன், ராமச்​சந்​திரனுக்கு ஆதர​வாக செயல்​பட்​டார். தேர்​தலில் ராமச்​சந்​திரன் வெற்றி பெற்​றார். இதனால் ராமச்​சந்​திரன் ஆதர​வாளர் ஜனார்த்​தனனுக்​கும், ரவி ஆதர​வாளர் குமார் என்​பவருக்​கும் முன்​விரோதம் உரு​வானது.

இந்​நிலை​யில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் 14-ம் தேதி ஜனார்த்​தனன், அவரது ஆதர​வாளர் கமலக்​கண்​ணன் (40) என்​பவருடன் அதே பகு​தி​யில் பேசிக்கொண்​டிந்​தார். அப்​போது அங்கு வந்த குமாருடன் தகராறு ஏற்​பட, இருதரப்​பினரும் தாக்​கிக் கொண்​டனர். இதில் இரு தரப்​பைச் சேர்ந்த ஜனார்த்​தனன், கமலக்​கண்​ணன், சிவா, ஜெயசீலன் உட்பட 7 பேருக்கு பலத்தகாயம் ஏற்​பட்​டது. மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட கமலக்​கண்​ணன் உயி​ரிழந்​தார். இதுகுறித்து தூக்​கணாம்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர்.

இந்த வழக்கு கடலூர் முதலா​வது கூடு​தல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தநிலையில் நீதிபதி சரஸ்​வதி நேற்று தீர்ப்​பளித்​தார். இதில் குற்​றம் நிரூபிக்​கப்​பட்​ட​தால் குமார் (48), வெங்​கடேசன் (32), மணி​யரசன் (29), கிருஷ்ண​ராஜ் (53), சிலம்​பரசன் (28), வினோத்​கு​மார் (28), பார​தி​தாசன் (28), அரவிந்த் (30), பரத்​ராஜ் (30) ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்​தும், தலா ரூ.3,000 அபராதம் விதித்​தும் தீர்ப்​பளித்​தார்.

இந்த வழக்கு நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கும் போது வழக்​கில் தொடர்​புடைய சிவ​ராமன் தூக்​குப் போட்டு தற்​கொலை செய்து கொண்​டார். மேலும், இவ்​வழக்​கில் தொடர்​புடைய சிலம்​பரசன் பாகூரில் 2022-ம் ஆண்டு நடந்த கொலை வழக்​கில் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்டு புதுச்​சேரி காலாப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். நேற்று அவர் கடலூர் நீதி​மன்​றத்​துக்கு அழைத்து வரப்​பட்​டு,பின் காலாப்பட்டு சிறை​யில்அடைக்​கப்​பட்​டார். தண்​டனை பெற்ற மற்​ற 8 பேரும்​ கடலூர்​ மத்​தி​ய சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in