பாமக இளைஞர் சங்கத் தலைவராக ஜி.கே.மணி மகன் தமிழ்க்குமரன் மீண்டும் நியமனம்

தைலாபுரத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவர் நியமன ஆணையை தமிழ்குமரனிடம் வழங்கிய கட்சி நிறுவனர் ராமதாஸ். உடன், ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர்.
தைலாபுரத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவர் நியமன ஆணையை தமிழ்குமரனிடம் வழங்கிய கட்சி நிறுவனர் ராமதாஸ். உடன், ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர்.
Updated on
1 min read

விழுப்புரம்: ​பாமக இளைஞர் சங்​கத் தலை​வ​ராக கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி​யின் மகன் தமிழ்​குமரனை நிறு​வனர் ராம​தாஸ் மீண்​டும் நியமித்​துள்​ளார். பாமக தலை​வர் பதவி​யில் இருந்து வெளி​யேற்​றப்​பட்ட ஜி.கே.மணியை ஆறு​தல்​படுத்​தும் வகை​யில், அவரது மகன் தமிழ்​குமரனுக்கு மாநில இளைஞர் சங்​கத் தலை​வர் பதவியை நிறு​வனர் ராம​தாஸ் வழங்​கி​னார்.

ஆனால், அன்​புமணி​யின் எதிர்ப்பு காரண​மாக தமிழ்க்​குமரன் பதவியி​லிருந்து வில​கி​னார். பின்​னர், ராம​தாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்​தி​யின் மகன் முகுந்​தன் இளைஞர் சங்​கத் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார். இதற்​கும் அன்​புமணி கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​து​வந்த நிலை​யில், 5 மாதங்​களில் முகுந்​தனும் பதவி வில​கி​னார். இந்த விவ​காரம் தொடர்​பாக ராம​தாஸ்​-அன்​புமணிக்​கிடையே கடும் மோதல் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், பாமக இளைஞர் சங்​கத் தலை​வ​ராக ஜி.கே.மணி மகன் தமிழ்​குமரனை கட்சி நிறு​வனர் ராம​தாஸ் மீண்​டும் நியமித்​துள்​ளார். இதற்​கான கடிதத்தை தைலாபுரத்​தில் ராம​தாஸ் நேற்று தமிழ்க்​குமரனிடம் வழங்​கி​னார். பின்​னர் ராம​தாஸ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அன்​புமணி​யின் எதிர்ப்பு காரண​மாக ஏற்​கெனவே தமிழ்க்​குமரன் பதவி வில​கி​னார்.

பின்​னர் அப்​ப​த​வியை எனது பேரன் முகுந்​தனுக்கு வழங்​கினேன். இதனால் மேடை​யிலேயே என் மீது ‘மைக்’ பாய்ந்​தது. இப்​போது அதே பொறுப்பை தமிழ்​குமரனுக்கு மீண்​டும் வழங்கி இருக்​கிறேன். அவர் சிறப்​பாக பணி​யாற்ற வாழ்த்​துகிறேன். பாமக​வினர் அனை​வரும் தமிழ்​குமரனுக்கு உறு​துணை​யாக இருக்க வேண்​டும்.

கரூரில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கல். அரசி​யல் கட்​சிக் கூட்​டங்​களை நடத்​தும்​போது, ஒரு உயிரைக்​கூட இழக்​காத வகை​யில் எச்​சரிக்​கை​யுடன் செயல்பட வேண்​டும். காவல் துறை​யினர் கண்​டிப்​புடன் வழி​காட்ட வேண்​டும். கரூர் சம்​பவத்​தில் ஒரு முதல்​வர் என்ன செய்ய வேண்​டுமோ, அதை ஸ்டா​லின் செய்​துள்​ளார். இவ்​வாறு ராம​தாஸ் கூறி​னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in