15 ஆண்டுக்கு மேலான அரசு வாகனங்கள் மேலும் ஓராண்டு பயன்படுத்த அனுமதி

15 ஆண்டுக்கு மேலான அரசு வாகனங்கள் மேலும் ஓராண்டு பயன்படுத்த அனுமதி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் 15 ஆண்​டு​களுக்கு மேலான அரசுத் துறை சார்ந்த 12 ஆயிரம் வாக​னங்​களுக்​கான பதிவுச் சான்று செல்லுபடி​யாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்​டித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 1-ம் தேதிக்கு பிறகு 15 ஆண்​டு​களுக்கு மேலான வாக​னங்​களைப் பயன்​படுத்த மத்​திய சாலை போக்குவரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சகம் தடை விதித்​தது. இத்​தகைய வாக​னங்​களுக்​கான பதிவுச் சான்றை வாகன இணை​யதளம் வாயி​லாக ரத்து செய்​தும் அமைச்​சகம் நடவடிக்கை எடுத்​திருந்​தது.

எனவே, அத்​தி​யா​வசி​யச் சேவை​கள் தடைபடு​வதைத் தடுக்​கும் வகை​யில் 15 ஆண்​டு​களுக்கு மேலான வாக​னங்​களை மேலும் ஓராண்டு பயன்​படுத்​தும் வகை​யில் 2 முறை தமிழக அரசு அனு​மதி வழங்கி அரசாணை வெளி​யிட்​டது. அந்த அனு​ம​திக்​கான கால அளவும் நேற்​றுடன் முடிவடைந்​தது. இதைத் தொடர்ந்​து, மேலும் ஓராண்டு பயன்​படுத்த அனு​ம​தித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்​துள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in