நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை

கரூரில் உயிரிழந்த சுகன்யா குடும்பத்தினரிடம் நேற்று விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன். (உள்படம்) சுகன்யா.
கரூரில் உயிரிழந்த சுகன்யா குடும்பத்தினரிடம் நேற்று விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன். (உள்படம்) சுகன்யா.
Updated on
1 min read

கரூர்: கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை ஆணை​யத் தலை​வர் நேற்றும் விசா​ரணை நடத்தினார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்​தனர். 110-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்​நிலை​யில், தீவிர சிகிச்​சைப் பிரி​வில் இருந்த வேலு​சாமிபுரத்தை சேர்ந்த சுகுணா(65) என்​பவர் நேற்று உயி​ரிழந்​தார்.

இதையடுத்​து, உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 41-ஆக உயர்ந்​துள்​ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த, ஓய்​வு​பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மையி​லான ஒரு நபர் விசா​ரணை ஆணை​யத்தை தமிழக அரசு அமைத்​தது. நேற்று முன்​தினம் கரூர் வந்த நீதிபதி அருணா ஜெகதீசன், அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருபவர்​களிட​மும், சம்​பவம் நடந்த இடத்​தி​லும் விசா​ரணை நடத்​தி​னார்.

இந்​நிலை​யில், கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்த வேலு​சாமிபுரம் வடிவேல் நகரைச் சேர்ந்த 2 வயது குழந்​தை​யான குரு​விஷ்ணு​வின் வீட்​டிலும், ஏமூர் புதூரைச் சேர்ந்த 5 பேரின் வீடு​களி​லும், வடிவேல் நகர் போலீஸ் குடி​யிருப்​பைச் சேர்ந்த சுகன்யா வீட்​டிலும் நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக நேற்று விசா​ரணை நடத்​தி​னார். அப்​போது, கூட்​டத்​துக்கு எப்​படி சென்​றார்​கள், யார் அழைத்​துச் சென்​றது உள்​ளிட்ட பல்​வேறு விவரங்​களை அவர் கேட்​டறிந்​தார்.

விசா​ரணை அதி​காரி மாற்​றம்: காவல் துறை தரப்​பில் இந்த வழக்​கின் விசா​ரணை அதி​காரி​யாக கரூர் டிஎஸ்பி செல்​வ​ராஜ் நியமனம் செய்​யப்​பட்​டிருந்​தார். இந்​நிலை​யில், அவர் திடீரென மாற்​றப்​பட்டு விசா​ரணை அதி​காரி​யாக ஏடிஎஸ்பி (தலை​மை​யிடம்) பிரேம் ஆனந்த் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in