​​​​​​​விவசாயிகளை தொழில்முனைவோராக உருவாக்குவோம்: சென்னை வேளாண் திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னையில் நேற்று நடைபெற்ற வேளாண் வணிகத் திருவிழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், கோவி.செழியன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் வ.தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள்.
சென்னையில் நேற்று நடைபெற்ற வேளாண் வணிகத் திருவிழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், கோவி.செழியன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் வ.தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள்.
Updated on
2 min read

சென்னை: ​விவ​சா​யிகளை தொழில் முனை​வோ​ராக மாற்றி புதிய ஏற்​றும​தி​யாளர்​களாக உரு​வாக்​கு​வோம் என்று சென்​னை​யில் நடை​பெற்ற வேளாண் திரு​விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உறுதி அளித்​தார்.

தமிழக அரசின் வேளாண்மை மற்​றும் உழவர் நலத்​துறை சார்​பில் இரண்​டு​நாள் வேளாண் திரு​விழா மற்​றும் வேளாண் கண்​காட்சி சென்னை நந்​தம்​பாக்​கம் வர்த்தக மையத்​தில் நேற்று தொடங்​கியது. இவ்​விழாவை தொடங்கி வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், 200 அரங்​கு​கள் அடங்​கிய கண்​காட்​சி​யை​யும் பார்​வை​யிட்​டார்.

அதன்​பின் முதல்​வர் பேசி​ய​தாவது: தமிழகம் வேளாண்​மை​யில் முன்​னோடி மாநில​மாக உயர்ந்து வரு​கிறது. குறுவைசாகுபடிக்கு மேட்​டூர் அணையை முன்​பைப் போல அல்லாமல் தாமதமின்றி குறித்த நாளில் திறந்து வரு​கிறோம். இந்த ஆண்​டு, 5.66 லட்​சம் ஹெக்​டரில் நெல் சாகுபடி நடந்​துள்​ளது. இது கடந்த ஆண்​டை​விட 1 லட்​சத்து 28,494 ஏக்​கர் கூடு​தலாகும். இதற்கு தேவை​யான உரங்​களை, தமிழகத்​துக்கு வழங்க வேண்​டும் என்று பிரதமருக்கு கடிதம் எழு​தி​யுள்​ளேன்.

கடந்த 4 ஆண்​டு​களில் 456.44 லட்​சம் டன் உணவு தானிய உற்​பத்​தியை எட்​டி​யிருக்​கிறோம். பயிர் உற்​பத்​தித் திறனில் இந்​திய அளவில் முதலிடம். மக்​காச்​சோளம், எண்​ணெய் வித்​துக்​கள் மற்​றும் கரும்பு உற்​பத்​தி​யில் இரண்​டாம் இடம். குறு தானி​யங்​கள் மற்​றும் நிலக்​கடலை உற்​பத்​தி​யில் மூன்​றாம் இடம் பிடித்​துள்​ளோம்.

‘கலைஞரின் அனைத்​துக் கிராம ஒருங்​கிணைந்த வேளாண் வளர்ச்​சித் திட்​டம்' மூலம் கடந்த 4 ஆண்​டு​களில், 10,187 கிராம ஊராட்​சிகளில், 52 லட்​சம் பேர் பயனடைந்​துள்​ளனர். 47 ஆயிரம் ஏக்​கர் தரிசு நிலங்​களை மீண்​டும் சாகுபடிக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளன. மண்​ணு​யிர் காத்து மண்​ணு​யிர் காப்​போம் திட்​டத்​தில், இது​வரை 20 லட்​சம் விவ​சா​யிகள் பயனடைந்​துள்​ளனர்.

கடந்த 4 ஆண்​டு​களில், தமிழகத்​தில் அதி​கபட்​ச​மாக 130 லட்​சம் டன் வேளாண் விளைபொருட்​கள், ஒழுங்​கு​முறை விற்​பனைக் கூடங்​களில் பரிவர்த்​தனை செய்​யப்​பட்​டுள்​ளது. விவ​சா​யிகளின் பொருளீட்​டுக் கடன் ரூ.3 லட்​சத்​திலிருந்து ரூ. 5 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. ஈரோடு மாவட்​டத்​தில், மஞ்​சள் ஏற்​றுமதி மையம், 14 புதிய உழவர் சந்​தைகள், நீல​கிரி​யில் சிறு​தானி​யங்​கள் பதப்​படுத்​தும் நிலை​யம், கொல்​லிமலை​யில் மிளகு பதப்​படுத்​தும் மையம், தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் தென்னை மதிப்​புக் கூட்டு மையம், களக்​காட்​டில் வாழை ஏலமையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், உழவர் உற்​பத்​தி​யாளர் நிறு​வனங்​கள் புதி​தாக தொழில் தொடங்​கு​வதற்கு ரூ.53 கோடி மானி​யம் வழங்​கப்​படு​கிறது.கங்​கை​கொண்​டானில் மெகா உணவுப் பூங்​கா, ‘தமிழ்​நாடு முந்​திரி வாரி​யம்’, இயற்கை இடர்​களால் பாதிக்​கப்​பட்ட 21 லட்​சம் விவ​சா​யிகளுக்கு ரூ.1,630 கோடி நிவாரணம், பயிர்க்​காப்​பீட்​டுத் திட்​டத்​தில் 32 லட்​சம் விவ​சா​யிகளுக்கு ரூ.5,720 கோடி இழப்​பீடு, நாகப்​பட்​டினம், சிவகங்​கை, கரூர் ஆகிய மாவட்​டங்​களில் 3 புதிய அரசு வேளாண் கல்​லூ

ரி​கள் அமைப்பு போன்ற பல்​வேறுசாதனை​களை நிகழ்த்​தி​யுள்​ளோம். விவ​சா​யிகளை தொழில் முனை​வோ​ராக மாற்றி புதிய ஏற்​றும​தி​யாளர்​களாக உரு​வாக்​கு​வோம். இவ்​வாறு பேசி​னார்.

விழா​வில், அமைச்​சர்கள் : எம்ஆர்கே பன்​னீர்​செல்​வம், கே.என். நேரு, தா.மோ.அன்​பரசன், கோவி.செழியன், வேளாண் துறை செயலர் வி.தட்​சிணா​மூர்த்​தி, ஆணை​யர் டி.ஆபிர​காம், வேளாண் இயக்​குநர் பா.​முரு​கேஷ் தோட்​டக்​கலைத் துறை இயக்​குநர் பெ.கு​மார​வேல் பாண்​டியன், சர்க்​கரைத் துறை இயக்​குநர் த.அன்​பழகன், வேளாண்​மை பொறி​யியல்​ துறை தலை​மை பொறி​யாளர்​ ஆர்​. முரு​கேசன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​துகொண்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in