கரூர் நெரிசல் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது: பிரதமர் மோடி

கரூர் நெரிசல் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது: பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர். சுமார் 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற அரசியல் கட்சியின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திக்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in