நீலக்கொடி கடற்கரை திட்டத்தை எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

நீலக்கொடி மற்றும் கடல்வழி மேம்பாலம் திட்டங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி தென் சென்னை அனைத்து மீனவ கிராமத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
நீலக்கொடி மற்றும் கடல்வழி மேம்பாலம் திட்டங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி தென் சென்னை அனைத்து மீனவ கிராமத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
Updated on
1 min read

சென்னை: நீலக்​கொடி கடற்​கரை திட்​டத்தை எதிர்த்து சென்​னை​யில் மீனவர்​கள் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சென்னை கடற்​கரைகளில் அமல்​படுத்​தப்​படும் நீலக்​கொடி கடற்​கரை, கடல்​ மேம்​பாலம், எண்​ணெய் எரி​வாயு போன்ற திட்​டங்​களை எதிர்த்து தென்​சென்னை அனைத்து மீனவ கிராம சபை சார்​பாக மீனவர்​களின் கண்டன ஆர்ப்​பாட்​டம், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நேற்று நடை​பெற்​றது. சபை​யின் ஒருங்​கிணைப்​பாளர் என்​.ரத்​தினவேல் தலைமை வகித்​தார்.

ஆர்ப்​பாட்​டம் குறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நீலக்​கொடி திட்​டம் வந்​தால் கடற்​கரை​யில் இருக்​கக்​கூடிய மீனவர்களின் கட்​டுமரங்​கள், வலைகள், ஃபைபர் படகு​கள் ஆகிய​வற்றை அகற்ற வேண்​டிய சூழல் ஏற்​படும். இத்​திட்​டம் உலக நாடு​களுக்கு பொருந்​தும். ஆனால் இந்​தியா போன்ற நாடு​களுக்கு பொருந்​தாது. ஏனென்​றால் இங்கு கரைதொழில் செய்​யக்​கூடிய மீனவ சமூகங்​கள் நிறைய உள்​ளன. மீன் பிடித்​தொழில் நடை​பெறும் இடத்​தில் நிச்​சய​மாக மீன் வாடை வரும்.

ஆனால் ஒரு வெளி​நாட்​ட​வர் நம் கடற்​கரைக்கு வந்​தால் மீன் வாடை வரு​கிறது என்ற புகார் நிச்​ச​யம் அளிப்​பார். அந்த புகாருக்கு எடுக்​கப்​படும் முதல் நடவடிக்​கை​யாக, எங்​களை (மீனவர்​களை) அப்​பகு​தி​யில் இருந்து அரசு காலிசெய்​யும். இது நீலக்​கொடி திட்டத்​தில் இருக்​கும் பேராபத்து ஆகும்.

இதனால் பாரம்​பரியமிக்க மீனவ மக்​களின் கடற்​கரை பறிக்​கப்​படும். அதே​போல் கடல்​வழி மேம்​பாலம் கட்​டு​வதற்​கான டெண்டரை தமிழக அரசு கோரி​யிருக்​கிறது. இந்த கடல்​ மேம்​பாலம் வந்​தால் மீனவர்​கள் கடலுக்​குள் செல்​வதே கடின​மான​தாக இருக்​கும். விபத்​துக்​கள் ஏற்பட நேரிடும்.

இதற்​கிடையே மத்​திய, மாநில அரசு இணைந்து 80 கிமீ தூரம் கொண்ட கடல்​வழி எரி​வாயு திட்​டத்தை ஹரி​கோட்​டா​வில் இருந்து கல்​பாக்​கம் அணுமின் நிலை​யம் இருக்​கும் புதுபட்​டினம் கடற்​கரை பகுதி வரை செயல்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளன. இந்த திட்​டத்​தின் மூலம் ஹைட்ரோ கார்​பன், மீத்​தேன் போன்​றவற்றை எடுப்​ப​தற்​காக முயற்​சிகள் நடந்து வரு​கின்​றன. இதனால் ஆழ்​கடல் மீன்​பிடித் தொழில் பாதிக்​கப்​படும். இந்த திட்​டங்​களை மத்​திய, மாநில அரசுகள் கைவிட வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in