கடந்த நான்கரை ஆண்டுகளில் உயரிய ஊக்கத்தொகையாக 4,510 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.150 கோடி: உதயநிதி தகவல்

கடந்த நான்கரை ஆண்டுகளில் உயரிய ஊக்கத்தொகையாக 4,510 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.150 கோடி: உதயநிதி தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் கடந்த நான்​கரை ஆண்​டு​களில் 4,510 விளை​யாட்டு வீரர்​களுக்கு ரூ.150 கோடி உயரிய ஊக்​கத்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ள​தாக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​தார். தமிழக இளைஞர் நலன், விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை சார்​பில் சர்​வ​தேச, ஆசிய, தேசிய அளவி​லான விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கங்​கள் வென்ற வீரர்​களுக்கு உயரிய ஊக்​கத்​தொகை வழங்​கும் நிகழ்ச்சி சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை வகித்​து, 819 விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்​கத்​தொகைக்​கான காசோலைகளை வழங்​கி​னார். பணி​யின்​போது கால​மான தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய பணி​யாளர்​களின் வாரிசுகளான எஸ்​.தீ​பா, ஆர்​.​தினேஷ், எம்​.​தினேஷ்கு​மார், பி.ஹரிஷ் ஆகிய 4 பேருக்கு கருணை அடிப்​படை​யில் பணி நியமன ஆணை​களை​யும் வழங்​கி​னார்.

பின்​னர், அவர் பேசி​ய​தாவது: கல்வி என்​றால் பள்​ளிக்​கல்​வி, உயர்​கல்வி மட்​டுமின்​றி, உடற்​கல்​வி​யும் முக்​கி​யம். இதனாலேயே, சென்​னை​யில் நடந்த ‘கல்​வி​யில் சிறந்த தமிழ்​நாடு’ நிகழ்ச்​சி​யில் விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களை​யும் அழைத்து முதல்​வர் ஊக்​கு​வித்​தார். விளை​யாட்டு வீரர்​களை கொண்​டாடு​வ​தில் நாட்​டிலேயே முதன்மை மாநில​மாக தமிழகம் உள்​ளது. அந்த அளவுக்கு அவர்​களுக்கு தேவை​யான வசதி​களை அரசு செய்து வரு​கிறது.

கடந்த நான்​கரை ஆண்​டு​களில் நாட்​டில் வேறு எங்​கும் இல்​லாத அளவில் 4,510 விளை​யாட்டு வீரர்​களுக்கு ரூ.150 கோடி உயரிய ஊக்​கத்​தொகையை தமிழக அரசு வழங்​கி​யுள்​ளது. பொது​வாக, போட்​டிகளில் பங்​கேற்று வெற்றி பெற்ற பிறகு​தான் வீரர்​களுக்கு அரசு அங்​கீ​காரம், பரிசுத் தொகை கிடைக்​கும். ஆனால், போட்​டி​யில் கலந்து கொள்​வதற்கு முன்பே வீரர்​களுக்கு ஊக்​கத்​தொகை, நிதி​யுத​வியை தமிழக அரசு மட்​டும்​தான் வழங்​கு​கிறது.

விளை​யாட்​டில் வெற்றி பெற்​றால் அரசு வேலை​யும் வழங்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், தமிழக வரலாற்​றில் முதல்​முறை​யாக கடந்த ஆண்டு 100-க்​கும் அதி​க​மான வீரர்​களுக்கு அரசு வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார். இந்த நிகழ்ச்​சி​யில் விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய துணைத் தலை​வர் அசோக் சிகாமணி, உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, ஸ்பீட் ஸ்கேட்​டிங் உலக சாம்​பியன் ஆனந்த்​கு​மார் வேல்​கு​மார், செஸ் கிராண்ட் மாஸ்​டர் ர.வைஷாலி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in