பயன்பாட்டுத் துறையின் தேவை அடிப்படையில் கட்டிடங்களுக்கான மதிப்பீடுகளை தயாரிக்கவும்: பொறியாளர்களுக்கு அமைச்சர் வேலு அறிவுறுத்தல்

பயன்பாட்டுத் துறையின் தேவை அடிப்படையில் கட்டிடங்களுக்கான மதிப்பீடுகளை தயாரிக்கவும்: பொறியாளர்களுக்கு அமைச்சர் வேலு அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ‘பயன்​பாட்​டுத் துறை​யின் தேவை​யின் அடிப்​படை​யில் கட்​டிடங்​களுக்​கான மதிப்​பீடு தயார் செய்ய வேண்​டும்’ என்று பொதுப்​பணித் துறை பொறி​யாளர்​களுக்கு அமைச்​சர் எ.வ.வேலு அறி​வுறுத்​தி​யுள்​ளார். சென்​னை, சேப்​பாக்​கம் பொதுப்​பணித் துறை பயிலரங்​கில், டிஎன்​பிஎஸ்சி வாயி​லாக தேர்வு செய்​யப்​பட்டு பொதுப்​பணித் துறை​யில் பணி​யில் சேர்ந்த உதவிப் பொறி​யாளர்​களுக்கு பயிற்சி வகுப்​பு​கள் நடை​பெறுகின்​றன.

இப்​ப​யி்ற்​சியை பார்​வை​யிட்டு அமைச்​சர் எ.வ.வேலு பேசி​ய​தாவது: அனைத்து உதவிப் பொறி​யாளர்​களும், பயிற்​சி​யின் அடிப்​படை​யில் திறமை​யாகப் பணிபுரிய வேண்​டும். பொறி​யாளர்​கள் மேன்​மேலும் படித்​து, அவர்​களு​டைய திறமையை வளர்த்​துக்​கொள்ள வேண்​டும்.

ஆய்வு செய்வதில் கவனம் தேவை: உதவிப் பொறி​யாளர்​கள், முதற்​கட்​டப் பணி​களாக, மண், நீர் பரிசோதனை, அஸ்​தி​வாரம் பணி​களின்​போது பூச்சி தடுப்பு முறை, கட்​டு​மானப் பொருட்​கள் பரிசோதனை, உப்பு நீரை தவிர்த்​தல், சாம்​பல் நிறத்​தில் சிமென்ட் உள்​ளதா என்​பதை பரிசோ​தித்​தல், மணல், தூசி, துரும்பு இல்​லாமல் இருப்​பதை உறுதி செய்​தல், கான்​கிரீட்​டுக்​கு பயன்​படுத்​தப்​படும் இரும்பு கம்​பிகள் துரு இல்​லாமல் இருப்​பதை உறுதி செய்​தல், செங்​கல் தரமான​தாக இருக்​கிறதா என்​பதை ஆய்வு செய்​தல் போன்​றவற்​றில் அதிக கவனம் செலுத்த வேண்​டும்.

கட்​டு​மானப் பணி​களை மேற்​பார்​வை​யிடு​தல், அனைத்து பணி​களும் வரைபடங்​கள் மற்​றும் தொழில்​நுட்ப விவரம் அடிப்​படையில் பணி நடை​பெறு​வதை உறுதி செய்​தல். பணி​களில் ஒப்​பந்​த​தா​ரர்​களு​டன் ஒருங்​கிணைந்து செயல்​படு​தல், தொழிலா​ளர்​களைக் கண்​காணித்​தல், பாது​காப்பு விதி​முறை​களைப் பின்​பற்​று​வதை உறுதி செய்​தல், கட்​டு​மானத்​தின்​போது ஏற்​படும் தொழில்​நுட்ப சிக்​கல்​களை தீர்க்க உறு​தி​ செய்​தல் போன்​றவற்றை உதவிப் பொறி​யாளர்​கள் பொறுப்​புடன் செயல்​படு​வது அவசியம் . இவ்​வாறு அவர் அறி​வுறுத்​தி​னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in