புதைமின் வடங்கள் சேதமடைவதை தடுக்க சாலை தோண்டும் பணியை மின் வாரியம் மேற்கொள்ள திட்டம்

புதைமின் வடங்கள் சேதமடைவதை தடுக்க சாலை தோண்டும் பணியை மின் வாரியம் மேற்கொள்ள திட்டம்
Updated on
2 min read

சென்னை: சென்னை மாநகரில் புதைமின் வடங்​கள் சேதமடைவதை தடுக்க, மாநகராட்​சி, குடிநீர் வாரிய பணி​களுக்கான சாலை தோண்​டும் பணி​களை மின்​வாரி​யம் மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நுகர்​வோருக்கு மின்​சா​ரம் விநி​யோகிக்க உயர​மான கம்​பங்​களில் மின் கம்​பிகள் பொருத்​தி​யும், நிலத்​துக்கு அடி​யில் மின் கம்​பிகளை புதைவடங்​களாக பொருத்​தி​யும் மின்​சா​ரம் கொண்டு செல்​லப்​படு​கிறது.

இதில், கிராமப்​புற, புறநகர் பகு​தி​களில் உயரமான கம்​பங்​களில் மின் கம்​பிகள் வாயி​லாக மின்​சா​ரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், நகர பகு​தி​களில் அதி​கப்​படி​யான நெரிசல், உயர்ந்த கட்​டிடங்​கள் உள்​ள​தால், பாது​காப்பை கருத்​தில் கொண்​டு, அங்கே மின் கம்​பங்​கள் அகற்​றப்​பட்​டு, புதைவட மின் கம்​பிகள் பொருத்​தப்​பட்​டன.

குறிப்​பாக, சென்னை மாநகர் முழு​வதும், புறநகர் பகு​தி​களில் பெரும்​பாலான இடங்​களில் புதை மின்​வடங்​கள் மூலம் மின்​விநி​யோகம் செய்​யப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், மாநகராட்​சி, குடிநீர் வாரி​யம் பணி​களுக்கு சாலை தோண்​டும் போது, பல இடங்​களில் புதை மின்​வடங்​கள் சேதப்​படுத்​தப்​படு​கின்​றன.

சேத​மாகும் மின்​வடங்​கள் சரி செய்​யப்​ப​டா​மல் அப்​படியே விட்டு செல்​லப்​படு​வ​தால், மழைக் காலங்​களில் மின் விபத்​துகள் ஏற்படு​கின்​றன. கடந்த சில நாட்​களுக்கு முன்பு கண்​ணகி நகரில் பெண் தூய்​மைப் பணி​யாளர் மின்​சா​ரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இதை தொடர்ந்​து, சென்னை மாநகர், புறநகர் பகு​தி​களில் சேதமடைந்த புதைமின் வடங்​களை கணக்​கெடுக்க சிறப்​புக் குழுக்கள் அமைக்​கப்​பட்டு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. மேலும், எதிர்​காலத்​தில் இது போன்ற விபத்​துகளை தடுக்க சாலைகளில் பள்​ளம் தோண்​டும் பணி​களை மின் வாரிய பணி​யாளர்​கள் மூலம் மேற்​கொள்​ள​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, மின்​வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் மின் விபத்து தடுப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக, சென்​னை​யில் மின் விபத்தை ஏற்​படுத்​தும் வகையி​லான புதைமின் வடங்​கள் மற்​றும் மின்​விபத்து பகு​தி​களைக் கண்​டறிய தனி குழுக்​கள் அமைக்​கப்​பட்​டன. கடந்த 2 வாரங்​களுக்கு மேலாக இந்​தக் குழுக்​கள் நடத்​திய ஆய்​வில், 700 புதைமின் வட சேதங்​கள் உட்பட பழுதடைந்த மற்​றும் தாழ்​வான பகு​தி​களில் உள்ள மின் பெட்​டிகள் என, 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மின்​விபத்​துகள் ஏற்​படும் பகு​தி​கள் கண்​டறியப்​பட்​டன.

இதில், புதை மின்வட சேதங்​கள் உட்பட 1,500-க்​கும் மேற்​பட்ட மின் உபகரண சேதங்​கள் சரி செய்​யப்​பட்​டுள்​ளன. இன்​னும் ஒரு வாரத்​துக்​குள் மீத​முள்ள சேதங்​களும் சரிசெய்​யப்​பட்டு மின் விபத்து உயி​ரிழப்​பு​கள் முற்​றி​லும் தடுக்​கப்​படும். மேலும், தற்​போது மாநக​ராட்​சி, குடிநீர் வாரி​யம், உள்​ளாட்சி அமைப்​பு​கள் சாலை தோண்​டும் பணி​களுக்கு முன் மின் வாரி​யத்​திடம் தகவல் தெரிவிக்க வேண்​டும் என்ற நிலை உள்​ளது. இருப்​பினும், பணி​களின் போது புதைமின் வடங்​கள் சேதப்​படு​கின்​றன.

இனி வரும் நாட்​களில் சாலை தோண்​டும் பணி​யை​யும் மின் வாரிய பணி​யாளர்​கள் மூலம் மேற்​கொள்​ள​வும், அந்த சாலை தோண்​டும் பணிக்​கான செலவை உள்​ளாட்சி அமைப்​பு​களிடம் இருந்து மின் வாரி​யம் பெறவும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து மற்ற துறை சார்ந்த அதி​காரி​களிடம் ஆலோ​சனை மேற்​கொள்​ளப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in