அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பணியில் தவெக ஈடுபட்டதாக வீடியோ: தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பணியில் தவெக ஈடுபட்டதாக வீடியோ: தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்
Updated on
1 min read

கரூர்: கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்​தில் தூய்​மைப் பணி மேற்​கொண்​ட​தாக தவெக​வினர் சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்​டிருந்த நிலை​யில், அப்​பள்​ளி​யின் தலைமை ஆசிரியை பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டார். கரூர் மாவட்​டம் தென்​னிலையில் அரசு மேல்​நிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. கடந்த சில தினங்​களுக்கு முன்பு இப்​பள்​ளிக்கு வந்த சில இளைஞர்​கள், பள்ளி வளாகத்​தைச் சுத்​தம் செய்​வ​தாகக் கூறி​யுள்​ளனர். அதற்கு பள்​ளி​யின் தலைமை ஆசிரியை சுஜாதா சியாமளா ஒப்​புதல் அளித்​ததைத் தொடர்ந்​து, அவர்​கள் பொக்​லைன் இயந்​திரத்​துடன் வந்து பள்ளி வளாகத்​தைச் சுத்​தம் செய்​தனர்.

இதை வீடியோ​வாகப் பதிவு செய்த இளைஞர்​கள், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் சுத்​தம் செய்து கொடுக்​கப்​பட்​ட​தாக சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டிருந்​தனர். அதில் பள்​ளித் தலைமை ஆசிரியை படமும் இடம் பெற்​றிருந்​தது.

இதற்​கு, தமிழ்​நாடு அறம்​சார் ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டமைப்பு எதிர்ப்பு தெரி​வித்​ததுடன், “முன் அனு​மதி பெறாமல் அரசி​யல் கட்​சி​யினர் இது​போல பணி​களை மேற்​கொண்டு சமூக வலை​தளத்​தில் பதி​விட்ட நடவடிக்​கை​யை, அரசுப் பள்​ளியை விளம்​பரத்​துக்​காகப் பயன்​படுத்​தி​ய​தாகத்​தான் கருத முடி​யும். மேலும், பள்ளி மாணவர்​களிடம் அக்​கட்​சி​யினர் அரசி​யல் குறித்து பேசி​யுள்​ளனர். எனவே, இந்த விவ​காரத்​தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என வலி​யுறுத்​தி​யது.

இதுகுறித்து கல்​வித் துறை அலு​வலர்​கள் விசா​ரணை நடத்​தி​யதைத் தொடர்ந்​து, தென்​னிலை பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதா சியாமளா, குளித்​தலை அரசு பெண்கள் மேல்​நிலைப் பள்​ளிக்கு நேற்று முன்​தினம் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in