மறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

மறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் மறைந்த ஐஏஎஸ் அதி​காரி​யின் ரூ.2.56 கோடி சொத்​துகளை முடக்கி அமலாக்​கத் துறை நடவடிக்கை எடுத்​துள்​ளது. மறைந்த முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி தியானேஸ்​வரன். இவர் தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் முக்​கிய பொறுப்​பு​களில் பதவி வகித்​துள்​ளார்.

இவர், 1996-ம் ஆண்டு அதி​முகஆட்​சி​யில், தமிழ்​நாடு கனிமவள நிறு​வனத்​தின் (டா​மின்) தலை​வ​ராக இருந்​தார். அப்​போது, தனது அதி​காரத்தை பயன்​படுத்​தி, தன் பெயரிலும், குடும்ப உறுப்​பினர்​கள் பெயரிலும் சட்​ட​ விரோத​மாக சொத்​துகளை வாங்கி குவித்​த​தாக இவர் மீது புகார் கூறப்​பட்​டது.

இதுதொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். விசா​ரணை​யில், 1991 முதல் 1996 வரையி​லான காலக்​கட்​டத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.7.34 கோடி சொத்​துகள் குவித்​தது கண்​டறியப்​பட்​டது. சிபிஐ விசா​ரணையை அடிப்​படை​யாக கொண்​டு, கடந்த 2017-ம் ஆண்டு அமலாக்​கத் துறை​யும் சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தி​யது.

தியானேஸ்​வரன் பதவி​யில் இருந்த காலத்​தில், ஷில்பி கிரி கன்​ஷ்ட்​ரக்​‌ஷன்ஸ் மற்​றும் டாக்​டர் தர்​மாம்​பாள் நமச்​சி​வா​யம் அறக்​கட்​டளை பெயரில், அசை​யும் மற்​றும் அசையா சொத்​துகள் வாங்கி இருப்​பது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இந்​நிலை​யில், விசா​ரணை நடந்து கொண்​டிருக்​கும்​போதே, கடந்த சில ஆண்​டு​களுக்கு முன்பு தியானேஸ்​வரன் கால​மா​னார்.

இந்​நிலை​யில், கடந்த பிப்​ர​வரி மாதம் 28-ம் தேதி தியானேஸ்​வரன் மற்​றும் அவரது குடும்ப உறுப்​பினர்​களுக்கு சொந்​த​மான இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் சோதனை நடத்​தினர். சோதனை​யின்​போது, ரூ.1.19 கோடி மதிப்​புள்ள சொத்​துகள் மற்​றும் பல்​வேறு முக்​கிய ஆவணங்​களை பறி​முதல் செய்​தனர்.

இதையடுத்​து, சோதனை​யில் பறி​முதல் செய்​யப்​பட்ட ஆவணங்​களை ஆய்​வுசெய்​து, தியானேஸ்​வரன் மற்​றும் குடும்ப உறுப்​பினர்​களுக்கு சொந்​த​மான ரூ.1.7 கோடி மதிப்​பிலான 16 அசையா சொத்​துகள் மற்​றும் வங்கிக் கணக்​கில் இருந்த ரூ.86.24 லட்​சம் பணம் என மொத்​தம் ரூ.2.56 கோடி சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்கி அறி​வித்​துள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in