தமிழக மின்துறை செயலர் பீலா வெங்கடேசன் காலமானார்

தமிழக மின்துறை செயலர் பீலா வெங்கடேசன் காலமானார்
Updated on
2 min read

சென்னை: தமிழக அரசின் மின்​துறை செயல​ராக இருந்த பீலா வெங்​கடேசன், உடல்​நலக் குறை​வால் பாதிக்​கப்​பட்ட நிலை​யில் கடந்த 2 மாதங்​களாக சென்னை கொட்​டி​வாக்​கத்​தில் உள்ள அவரது வீட்​டில் ஓய்​வில் இருந்து வந்​தார். இந்​நிலை​யில், நேற்று மாலை உடல்​நிலை மோசமடைந்து கால​மா​னார். அவருக்கு வயது 56.

கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தைச் சேர்ந்த பீலா வெங்​கடேசன், 1969-ம் நவ.11-ல் பிறந்​தார். தாயார் ராணி வெங்​கடேசன் சாத்​தான்​குளம் தொகு​தி​யின் முன்​னாள் காங்​கிரஸ் எம்​எல்​ஏ​வாக இருந்​துள்​ளார். தந்தை வெங்​கடேசன், தமிழக காவல்​துறை டிஜிபி​யாக பதவி வகித்து ஓய்வு பெற்​றவர். எம்​பிபிஎஸ் படித்​துள்ள பீலா வெங்​கடேசன், கடந்த 1997-ம் ஆண்டு ஐஏஎஸ் அதி​காரி​யா​னார்.

முதலில் 1998-2000-ம் ஆண்டு வரை பிஹாரிலும் பின்​னர் ஜார்​கண்ட் மாநிலத்​தி​லும் பணி​யாற்​றி​னார். அதன் பிறகு தமிழகத்​துக்கு மாற்​றப்​பட்டு 2000 முதல் 2001 வரை செங்​கல்​பட்டு சார் ஆட்​சி​ய​ராக​வும், அதன்​பின் 2001 மே முதல் 2002 ஆகஸ்ட் வரை முதல்​வரின் தனிப்​பிரிவு சிறப்பு அதி​காரி​யாக​வும் பணி​யாற்​றி​னார். தொடர்ந்​து, சமூக நலத்​துறை கூடு​தல் இயக்​குநர், ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை துணை செயலர் பதவி வகித்​தார்.

இந்​நிலை​யில் 2003 முதல் 2007 வரை ஜார்க்​கண்ட் மாநிலத்​துக்கு மாற்​றப்​பட்​டார். அதன்​பின் மத்​திய ஜவுளித் துறை​யில் 2014 வரை பணி​யாற்​றிய நிலை​யில் மீண்​டும் 2014 ஜூன் மாதம் தமிழகம் வந்தார். சென்னை மீன்​வளத்​துறை ஆணை​ய​ராக​வும், அதன்​பின் நகர ஊரமைப்​புத்​துறை ஆணை​யர், இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஓமியோப​தித் துறை ஆணை​யர் பொறுப்​பு​களி​லும் இருந்​தார்.

கடந்த 2019 பிப்​ர​வரி முதல் 2020 ஜூன் மாதம் வரை கரோனா பெருந்​தொற்று காலத்​தில் சுகா​தா​ரத் துறை செயல​ராக பணி​யாற்றினார். அதன்​பின் வணி​கவரி மற்​றும் பத்​திரப்​ப​திவுத் துறை செயலர், கைத்​தறித்​துறை ஆணை​யர், நில சீர்​திருத்​தத்​துறை ஆணை​யர் பொறுப்​பு​களை வகித்​தார். இறு​தி​யாக மின்​துறை செயல​ராக பணி​யாற்றி வந்​தார்.

ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸை 1992-ம் ஆண்டு திரு​மணம் செய்து கொண்​டார். அதன்​பிறகு அவரின் பெயர் பீலா ராஜேஷ் என்று மாறியது. ராஜேஷ் தாஸ் தமிழக காவல்​துறை​யின் சிறப்பு டிஜிபி​யாக பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர். இரு​வருக்​கும் இடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​டது. இதையடுத்​து, தனது பெயரை பீலா வெங்​கடேசன் என மாற்​றிக் கொண்​டார்.

இவரது மறைவையொட்டி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில், தமிழக அரசின் செயலர் பீலா வெங்​கடேசன் மறைந்த செய்​தி​யறிந்து மிகுந்த அதிர்ச்​சி​யும் வேதனை​யும் அடைந்​தேன். பல்​வேறு முக்​கிய துறை​களில் செய​லா​ள​ராக பணி​யாற்​றிய அனுபவ​மிக்​கவர். கரோனா பெருந்​தொற்​றுக் காலத்​தில் சவால் மிகுந்த சுகா​தா​ரத் துறை செயல​ராக பணி​யாற்​றிய​வர். அவரது அகால மரணம் மிகுந்த வருத்​தமளிக்​கிறது. அவரை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்​கும், உயர் அலு​வலர்​களுக்​கும் ஆழ்ந்த இரங்​கலை​யும் ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன் என தெரி​வித்​துள்​ளார். இதே​போல் தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகையும் இரங்​கல் செய்​தி வெளியிட்டுள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in