வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு பிறகு சென்னையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 4,071 ஆக உயர்வு

சென்னை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக, அனைத்து
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் மற்றும் அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் மற்றும் அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. | படம்: எல்.சீனிவாசன் |
Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் மறுசீரமைப்​புக்​குப் பிறகு வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்கை 4,071 ஆக உயர்ந்​துள்​ள​தாக அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டத்​தில் சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​துள்​ளார்.

ஒரு வாக்​குச்​சாவடி​யில் 1,200 வாக்​காளர்​களுக்கு மேல் இருந்​தால் அதை பிரித்து வாக்​குச்​சாவடிகளை மறுசீரமைப்பு செய்ய இந்​திய தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது. அதன் அடிப்​படை​யில் சென்னை மாவட்​டத்​தில் தேர்​தல் வாக்​குச்​சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்​பாக அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிப் பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம், ரிப்​பன் கட்​டிட அலு​வல​கக் கூட்​டரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​தில் ஒரு கட்​சிக்கு 2 பிர​தி​நி​தி​கள் மட்​டுமே கலந்​து​கொள்ள அனு​ம​திக்​கப்​பட்​டனர். அந்த வகை​யில் அங்கீகரிக்கப்பட்ட அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​களாக திமுக சார்​பில் சட்​டத்​துறை துணை செய​லா​ளர் சந்​துரு, அதி​முக சார்​பில் முன்​னாள் அமைச்சர் ஜெயக்​கு​மார், பால​கங்​கா, பாஜக சார்​பில் மாநில செய​லா​ளர் கராத்தே தியாக​ராஜன், கவுன்​சிலர் உமா ஆனந்த், காங்கிரஸ் கட்சி சார்​பில் சூரிய பிர​காசம், நவாஷ், இந்​திய கம்​யூனிஸ்ட் சார்​பில் மாவட்ட நிர்​வாக குழு உறுப்​பினர் உசேன், மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் சார்​பில் மாவட்ட செயற்​குழு உறுப்​பினர்​கள் எஸ்​.கே.​முரு​கேஷ், எஸ்​.கு​மார் ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்ட தேர்​தல் அலு​வலரும், மாநக​ராட்சி ஆணை​யரு​மான ஜெ.குமரகுருபரன் ஆலோ​சனைக் கூட்​டத்​துக்கு தலைமை வகித்​து, கட்சி பிர​தி​நி​தி​களுக்கு சென்​னை​யில் மறுசீரமைக்​கப்​பட்ட புதிய வாக்​குச்​சாவடிகளின் விவரங்​கள் குறித்து விளக்​கமளித்​தார்.

அதன்​படி சென்​னை​யில் உள்ள 3,718 வாக்​குச்​சாவடிகளில் 1,200-க்​கும் அதி​க​மான வாக்​காளர்​களைக் கொண்டு வாக்​குச்​சாவடிகள் மறுசீரமைக்​கப்​பட்​டு, புதி​தாக 353 வாக்​குச்​சாவடிகள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளதாக​வும், சென்​னை​யில் தற்​போது வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்​கை, 4,071 ஆக உயர்ந்​திருப்​ப​தாக​வும் தெரி​வித்​தார்.

இதையொட்டி கட்​டிட மாற்​றம், பெயர் மாற்​றம், வாக்​குச்​சாவடிகள் இணைப்பு மற்​றும் வாக்​குச்​சாவடிகள் பிரிப்பு உள்​ளிட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக​வும் அவர் தெரி​வித்​துள்​ளார். இக்​கூட்​டத்​தில் கூடு​தல் மாவட்ட தேர்​தல் அலு​வலர் ம.பிர​தி​வி​ராஜ், மாவட்ட வரு​வாய் அலு​வலர் ஜி.சர​வண​மூர்த்தி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

கூட்​டத்​தில், 2025 ஜனவரி மாதம் வெளி​யிடப்​பட்ட வாக்​காளர் பட்​டியல்​படி சென்​னை​யில் மொத்​தம் 40.15 லட்​சம் வாக்​காளர்​கள் இருப்​ப​தாக​வும், அதில் 19.70 லட்​சம் ஆண்​களும், 20.44 லட்​சம் பெண்​களும், 1,276 இதர வாக்​காளர்​களும் இருப்​ப​தாக கூறப்​பட்​டது. மேலும் 10,736 மாற்​றுத் திற​னாளி வாக்​காளர்​களும், 85 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​கள் 81,047 வாக்​காளர்​களும், 564 வாக்​காளர்​கள் ராணுவத்​தில் பணி​யாற்றி வரு​வ​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in