“அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜக தான்” - பெ.சண்முகம் விமர்சனம்

“அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜக தான்” - பெ.சண்முகம் விமர்சனம்

Published on

சென்னை: “அதிமுக எத்தனை கோஷ்டிகளாக பிரிந்தாலும், அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜகதான்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிமுகவில் ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வருகின்றனர். எனவே, பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. அதிமுக எத்தனை கோஷ்டிகளாக பிரிந்தாலும், அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜகதான்.

‘மோடியா லேடியா’ என்று முழங்கிய ஜெயலலிதாவின் அதிமுக இயக்கம் இன்றைக்கு ‘அண்ணன் அமித் ஷா என்ன சொல்கிறாரோ அதன்படிதான் நடப்போம்’ என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதைத்தான் இந்த டெல்லி சந்திப்புகள் உறுதிப்படுத்து கின்றன” என்று பெ.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in