நடிகர் எம்.ஆர்.ராதா மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் அஞ்சலி

நடிகர் எம்.ஆர்.ராதா மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் அஞ்சலி
Updated on
1 min read

சென்னை: மறைந்த நடிகர் எம்​.ஆர்​.​ரா​தா​வின் மனைவி கீதா ராதா சென்​னை​யில் நேற்று முன்​தினம் கால​மா​னார். அவரது உடலுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், திரை​யுல​கினர் அஞ்​சலி செலுத்​தினர்.

மறைந்த நடிகர் எம்​.ஆர்​.​ரா​தா​வின் மனை​வி​யும், நடிகை கள் ராதிகா சரத்​கு​மார், நிரோஷா ராம்கி ஆகியோரின் தாயாரு​மான கீதா ராதா (86), வயது மூப்​பின் காரண​மாக நேற்று முன்​தினம் மாலை சென்​னை​யில் கால​மா​னார். அவரது உடல் சென்னை போயஸ் கார்​டனில் உள்ள இல்​லத்​தில் பொது​மக்​கள் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டது.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லினுடன் சென்று கீதா ராதா​வின் உடலுக்கு நேற்று மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தி​னார். தொடர்ந்து நடிகைகள் ராதி​கா, நிரோஷா, நடிகர்​கள் ராதா​ர​வி, சரத்​கு​மார் ஆகியோ​ருக்கு ஆறு​தல் கூறி​னார்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தமிழக பாஜக மூத்த தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், தேசிய மகளிரணி தலை​வர் வானதி சீனி​வாசன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்பாளர் சீமான், வி.கே.சசிகலா, முன்​னாள் எம்​.பி. திரு​நாவுக்​கரசர், நடிகர்கள் பிரபு, நாசர், நிழல்​கள் ரவி, செந்​தில், நடிகைகள் மீனா, ரேகா, இயக்​குநர் கே.எஸ்​.ரவிக்​குமார் உள்​ளிட்​டோரும் கீதா ராதா உடலுக்கு அஞ்​சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல், பெசன்ட் நகர் மின்​ம​யானத்​தில் நேற்று மாலை தகனம் செய்​யப்​பட்​டது. கீதா ராதா மறைவுக்கு முதல்​வர் ஸ்டா​லின், தமிழக பாஜக தலை​வர்​ நயி​னார்​ ​நாகேந்​திரன்​ உள்​ளிட்​டோர்​ இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in