தமிழகம் முழுவதும் 1,231 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்: பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தமிழகம் முழுவதும் 1,231 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்: பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
Updated on
2 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் 1,231 கிராம சுகா​தார செவிலியர் பணி​யிடங்​களுக்​கான பணி நியமன ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக சுகா​தா​ரத் துறை சார்​பில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், அரசு செவிலியர் பயிற்சி பள்​ளி​யில் படித்​தவர்​களை, 1,231 கிராம சுகா​தார செவிலியர் பணி​யிடங்​களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்​யப்​பட்​டு, அதற்​கான பணி நியமன ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார். அப்​போது தமிழ்​நாடு அரசு டாக்​டர்​கள் சங்​கம், தமிழ்​நாடு மருத்​துவ அலு​வலர்​கள் சங்​கம், நர்​ஸ்​கள் பொதுநல சங்​கம், தமிழ்​நாடு அரசு கிராமப் பகுதி சமு​தாய சுகா​தார செவிலியர் சங்​கம் ஆகிய சங்​கங்​களின் சார்​பில் அதன் நிர்​வாகி​கள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சந்​தித்​து நன்றி தெரி​வித்​தனர்.

இந்​நிகழ்​வில் அமைச்​சர்​கள் மா.சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர்​பாபு, மேயர் ஆர்​.பிரி​யா, சுகா​தா​ரத் துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண் தம்​பு​ராஜ், பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய் தடுப்பு மருந்து இயக்​குநர் எ.சோமசுந்​தரம், மருத்​து​வம் மற்​றும் ஊரகநலப் பணி​கள் இயக்​குநர் சித்ரா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

2025-ல் மக்​கள் தொகைக்​கேற்ப மேலும் 642 துணை சுகா​தார நிலை​யங்​கள், கிராமம் மற்​றும் நகர்ப்​புறத்​தில் புதி​தாக உரு​வாக்​கப்​பட்டு தற்​போது கிராமப்​புறங்​களில் 8,713 துணை சுகா​தார நிலை​யங்​களும், நகர்​புறங்​களில் சென்னை உட்பட 2,368 துணை சுகா​தார நிலை​யங்​களும் செயல்​படு​கின்​றன. கிராமப்​புற சுகா​தார நிலை​யங்​களில் கிராம சுகா​தார செவிலியர்​களும், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் துணை செவிலியர்​களும் பணிபுரிந்து வரு​கிறார்​கள்.

கிராம சுகா​தார செவிலியர்​கள் தாய் சேய் நலப்​பணி, தடுப்​பூசி பணி, குடும்ப நலத்​திட்ட பணி​கள்,கருத்​தடையை ஊக்​கு​வித்​தல், டாக்​டர் முத்​துலட்​சுமி ரெட்டி மகப்​பேறு நிதி​யுதவி திட்​டம், வளரிளம் பெண்​களுக்கு சானிடரி நாப்​கின்​கள் வழங்​குதல், ரத்​தசோகை தடுப்பு மாத்​திரை வழங்கு​தல், பள்ளி சிறார்​களுக்கு தடுப்​பூசி செலுத்​தும் பணி, கிராமபுறங்​களில் சிறுசிறு நோய்​களான வயிற்​றுப்​போக்​கு, சுவாச தொற்று நோய்​களுக்கு சிகிச்சை அளித்​தல், குடும்ப பதிவேடு பராமரித்​தல் போன்ற பணி​களை மேற்​கொள்கின்​றனர்.

துணை செவிலியர்​கள் ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் வெளிப்​புற நோயாளி​களுக்கு சிகிச்சை அளித்​தல், பிரசவம் பார்த்​தல், தடுப்​பூசி பணி​கள், தாய் சேய் நல பரிசோதனை போன்ற பணி​களை செய்​கின்​றனர். உச்​சநீ​தி​மன்ற வழக்​கில் தடை​யாணை காரண​மாக துணை சுகா​தார நிலை​யங்​கள் மற்​றும் ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் காலி​யாக இருந்த கிராம சுகா​தார செவிலியர்​கள் மற்​றும் துணை செவிலியர்​கள் பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட​வில்​லை.

முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பணி​களை மேற்​கொள்​ளும் கிராம சுகா​தார செவிலியர்​கள் மற்​றும் துணை செவிலியர்​களின் காலி பணி​யிடங்​களை நிரப்​பிட அரசால் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டு, தற்​போது உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின் வழி​காட்​டு​தலின்​படி, அரசு செவிலியர் பயிற்சி பள்​ளி​யில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதிக்கு முன்பு தேர்ச்​சிபெற்ற 1,231 பேருக்கு வெளிப்​படை​யான முறை​யில் கலந்​தாய்வு நடத்​தப்​பட்டு காலி​யிடங்​களுக்கு நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். மீத​முள்ள 2,417 காலி​யிடங்​கள் மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூலம் விரை​வில் நிரப்ப நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இவ்​​வாறு செய்​தி​க்​குறிப்​பில் தெரிவி​க்​கப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in