ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு

ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் ரூ.105 கோடி மதிப்​பில் நடந்​துள்ள இன்​சூரன்ஸ் மோசடிகள் தொடர்​பாக இன்​சூரன்ஸ் நிறு​வனங்கள் அளித்​துள்ள 467 புகார்​கள் மீது உடனடி​யாக வழக்​குப்​ப​திவு செய்து சிறப்பு புல​னாய்​வுக் குழு​வுக்கு அனுப்ப போலீஸாருக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஒரு விபத்​துக்கு பல்​வேறு நீதி​மன்​றங்​களில் இன்​சூரன்ஸ் கோரி வழக்கு தொடர்ந்து முறைகேட்டில் ஈடு​பட்​டது உள்​ளிட்ட மோசடிகள் தொடர்​பான வழக்கு விசா​ரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நடந்​தது. அப்​போது இன்​சூரன்ஸ் நிறு​வனம் தரப்​பில், “இன்​சூரன்ஸ் நிறு​வனங்​களிடம் ரூ.105 கோடி மோசடி தொடர்​பாக அளிக்​கப்​பட்​டுள்ள 467 புகார்​கள் மீது இது​வரை போலீ​ஸார் எப்​ஐஆர் பதிவு செய்​ய​வில்​லை.

எனவே அந்த புகார்​கள் மீது எப்​ஐஆர் பதிவு செய்து அந்த வழக்​கு​களை சிறப்பு புல​னாய்வு குழு​வின் விசா​ரணைக்கு அனுப்ப உத்தரவிட வேண்​டும் என்​றும் என வாதிடப்​பட்​டது. அப்​போது காவல்​துறை தரப்​பில் இன்​சூரன்ஸ் மோசடி தொடர்​பாக சிறப்பு புலனாய்வு குழு விசா​ரணை நடத்த தயா​ராக உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி, “ரூ.105 கோடி இன்​சூரன்ஸ் மோசடி தொடர்​பாக அளிக்​கப்​பட்​டுள்ள 467 புகார்​கள் மீது இது​வரை வழக்​குப்​பதிவு செய்​ய​வில்லை என குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது. எனவே இந்த புகார்​கள் மீது உடனடி​யாக எப்​ஐஆர் பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு​வின் விசா​ரணைக்கு அனுப்ப வேண்​டும்.

அந்​தக்​குழு விரை​வாக விசா​ரணை நடத்த வேண்​டும். அதே​போல ஓசூர் மோட்​டார் வாகன விபத்து தீர்ப்​பா​யத்​தில் 82 போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்​கு​களில் சம்​பந்​தப்​பட்ட வழக்​கறிஞர்​கள் குறித்​தும், மாய​மான வழக்கு கட்​டு​கள் குறித்​தும் மாவட்ட நீதிபதிகள் உரிய விசா​ரணை நடத்தி அதுகுறித்த அறிக்​கையை வரும் அக்​.17-ம் தேதி தாக்​கல் செய்ய வேண்​டும்” என உத்​தர​விட்​டு விசாரணை​யை தள்​ளி வைத்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in